பொதுவாக ஒரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை பற்றி அறிவிக்கப்படும். ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். எனினும் இந்த விடுமுறை நாட்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். ஏனெனில் விடுமுறை நாட்களுக்கான வங்கி பணிகளை முன் கூட்டியே திட்டமிட்டு செய்யலாம்.
பொது விடுமுறை நாட்கள் (General Holidays)
- பிப்ரவரி 2 - சோனம் லோச்சார் (காங்டாக்கில் வங்கிகள் விடுமுறை)
- பிப்ரவரி 5 - சரஸ்வதி பூஜை/ஸ்ரீ பஞ்சமி/வசந்த பஞ்சமி (அகர்தலா, புவனேஷ்வர், கொல்கத்தாவின் வங்கிகளுக்கு விடுமுறை)
- பிப்ரவரி 15 - முகமது ஹஸ்ரத் அலி பிறந்த நாள்/லூயிஸ் - நாகை- நி (இம்பால், கான்பூர், லக்னோவில் வங்கிகள் மூடப்படும்)
- பிப்ரவரி 16- குரு ரவிதாஸ் ஜெயந்தி(சண்டிகாரில் வங்கிகள் மூடப்படும்)
- பிப்ரவரி 18 - டோல்ஜாத்ரா (கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்)
- பிப்ரவரி 19 - சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடப்படும்)
வார விடுமுறை நாட்கள் ?(Weekly Holidays)
- பிப்ரவரி 6 - ஞாயிறு (வார விடுமுறை)
- பிப்ரவரி 12 - இரண்டாவது சனிக்கிழமை (வார விடுமுறை)
- பிப்ரவரி 13 - ஞாயிறு (வார விடுமுறை)
- பிப்ரவரி 20 - ஞாயிறு (வார விடுமுறை)
- பிப்ரவரி 26 - 4வது சனிக்கிழமை (வார விடுமுறை)
- பிப்ரவரி 27 - ஞாயிறு (வார விடுமுறை)
தமிழகத்தில் (In Tamilnadu)
தமிழகத்தில் வார விடுமுறை தவிர மற்ற பொது விடுமுறை நாட்கள் விடுமுறை இல்லை. ஆக இந்த விடுமுறை நாட்களால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு என்பது இல்லை. எனினும் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது இது பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க
மொபைல் போன் உதவியுடன் திருட்டைத் தடுத்த பெண்!
இணைய வழி மோசடிகள் அதிகரித்து வருகிறது: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
Share your comments