அமெரிக்காவின் மேரிலாந்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்து 125 பாம்புகளை அமெரிக்க போலீசார் மீட்கப் பட்டிருப்பது, அக்கம்பக்கத்தினரை, அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. 125 பாம்புகளும் அவரைக் கடித்ததால் உயிரிழந்தாரா? அத்தனை பாம்புகளையும் அவர் வளர்த்து வந்தாரா? இதற்கு மேல் எத்தனை பாம்புகள் இருந்தன? இல்லை இறுதிச்சடங்கில் பங்கேற்கின்றனவா? இப்படிக் கேள்விகளின் பட்டியல் நீளுகிறது.
இது ஒருபுறம் என்றால், தங்கள் பகுதிக்குள் எத்தனைப் பாம்புகள் தப்பிச் சென்றன? அவற்றிடம் இருந்து தப்பித்துக்கொள்வது எப்படி? எத்தனை நாட்களில் பாம்புகள் அனைத்தும் பிடிபடும்? என புலம்பத் தொடங்கி இருக்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். அமெரிக்காவில் பாம்புகள் சூழ வீட்டில் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிர்ச்சி (Shock)
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள சார்லஸ் கவுண்டி பகுதியில் ஒரு வீட்டில் 49 வயது நபர் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
125 பாம்புகள் (125 snakes)
இறந்த அந்த நபரை சுற்றி பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. 14 அடி மஞ்சள் பர்மிய மலைப்பாம்பு உள்பட மொத்தம் 125 பாம்புகளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு நாளுக்கு மேலாக அந்த நபரை காணாததால், அவரை பார்க்க முடிவு செய்து அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, அந்த நபர் தரையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாம்புக்கடி மரணமா?
இறந்து போன நபர் பாம்பு கடித்து இறந்தாரா அவர் எதற்காக அத்தனை பாம்புகளை வைத்திருந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
பிரேதப் பரிசோதனை
அங்கு முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் இல்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இறந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுப்புறத்தில் வசிப்போர் பாம்புகள் குறித்து அச்சப்படதேவையில்லை என்றும் எந்த பாம்பும் தப்பித்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் சார்லஸ் கவுண்டி பகுதி விலங்குகள் கட்டுப்பாட்டுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் ஹாரிஸ் உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments