தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ரேஷன் கடைப் பணியாளர்கள் , அகவிலைப்படியை உயர்த்தக் கோரி போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கோரிக்கையை ஏற்று, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர். இந்தக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து தமிழக அரசு, அகவிலைப்படி உயர்வு வழங்கத் தற்போது உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.
28% அகவிலைப்படி
1.01.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து 1.01.2022 முதல் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெற உத்தரவிட்டுள்ளார். மேலும், வும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் ஆணை பிறப்பித்துள்ளார்.
கூடுதல் செலவு
இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.
இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
Share your comments