1. மற்றவை

150-க்கும் மேற்பட்ட தனியார்துறை மூலம் வேலைவாய்ப்பு: சிறப்பு முகாம் கலந்துக்கொள்ள அழைப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
150+ Private Sector provides Jobs: Call to candidate for the Special Camp!

கலைஞர் அவர்களின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, அவர்கள் தகவல் அறிவிப்பிணை அறிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.08.2023 (சனிக்கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கி கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்தியேக அரங்கம் அமைத்து ஆலோசனை அளிக்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் படிக்க: நகர்புற விவசாயம் செய்ய 40பேருக்கு மாஸ்டர் டிரேய்னரிங் அளிக்கப்படுகிறது: இன்றே விண்ணப்பிக்கவும்!

மேலும், வேலைநாடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்" (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, அவர்கள் தெரிவித்துள்ளார். இச்செய்தி புதுக்கோட்டை செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் அறிவிப்பு அடிப்படையில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பல தொழிற் பிரிவுகளில் சான்றிதழுடன் வேலைவாய்ப்பு பெறலாம்!

வீட்டு கொல்லைப்புறத்தில் கோழி வளர்க்க சரியான தேர்வு: வெற்றிக் கண்டுள்ளார் மாம்பழ விவசாயி

English Summary: 150+ Private Sector provides Jobs: Call to candidate for the Special Camp! Published on: 23 August 2023, 05:57 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.