29 வயது பெண்ணுக்கு 19 வயது மகள் இருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாயும் மகளும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த டிக் டாக் பிரபலம் கிறிஸ்டில், 29 வயதான இவருக்கு 19 வயது மகள் உள்ளார். கிறிஸ்டில், ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தொழிலதிபருக்கு ஏற்கனவே திருமணமாகி 19 வயதில் மகள் இருக்கும் நிலையில் அந்த மகளும் கிறிஸ்டில், மகளாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா - மகள் (Mother - Daughter)
தனது கணவரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவராக இருந்தாலும் அந்த பெண்ணை தனது மகள் போலவே கிறிஸ்டில், நடத்தி வருவதை அடுத்து 29 வயது கிறிஸ்டில், 19 வயது மகள் இருக்கிறாள் என்பது உறுதியாகிறது.
இதனை அடுத்து அம்மா மகள் போல் இல்லாமல் அக்கா தங்கை போல் இருவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பத்தில் வாழ்ந்து வருவதாக அவர்களை பாராட்டி போற்றி வருகின்றனர்.
இணையத்தில் வைரல் (Viral on Internet)
தாயும் மகளும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்ற, அது உடனே வைரலாக பரவியது. இதனை அடுத்து இளவயது தாய்க்கும், இளவயது மகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க
மொபைல் போன் உதவியுடன் திருட்டைத் தடுத்த பெண்!
மூளையை கட்டுப்படுத்தும் நவீன சிப்: விரைவில் பரிசோதனை துவக்கம்!
Share your comments