அஞ்சல் துறையில் கிராமின் டக் சேவக்ஸ் (Gramin Dak Sevak) பிரிவில் காலியாக உள்ள 30041 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க வரும் 23 ஆம் தேதி தான் கடைசி நாளாகும். ஆதலால், இப்பணியில் சேர விருப்பமுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Gramin Dak Sevak என்னும் பதவியில் தற்போது Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM) என்கிற இரு பிரிவின் கீழ் ஆட்சேர்ப்பு நடைப்பெற உள்ளது. மொத்தம் காலியாக உள்ள 30,041 பணியிடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 2,994 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைப்பெற உள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு-
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (ஆங்கிலம், கணிதம் பாடத்தில் தேர்ச்சி)
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை ( குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு- அவற்றின் விவரம் பின்வருமாறு )
- SC/ST - 5 வருடம்
- OBC - 3 வருடம்
- EWS - வயது வரம்பில் தளர்வு இல்லை
- PwD (மாற்றுத்திறனாளிகள்) - 10 வருடம்
- (PwD)+OBC - 13 வருடம்
- (PwD)+SC/ST - 15 வருடம்
இதர தகுதிகள்: நீங்கள் விண்ணப்பிக்கும் பகுதிக்கான (அஞ்சல் வட்டம்) உள்ளூர் மொழியறிவு இருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை : www.indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தொடங்கிய தினம்: 03 August 2023
விண்ணப்பிக்க கடைசி நாள் : 23 August 2023
விண்ணப்ப கட்டணம்:
- பெண்கள்/SC/ST/PWD/Transwomen -கட்டணம் ஏதுமில்லை
- மற்ற அனைவருக்கும்- ரூ. 100 மட்டும்
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இப்பதவிக்கு மற்றவற்றைப் போல் எழுத்துத் தேர்வு, நேர்க்காணல் என எதுவும் கிடையாது. 10 ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைப்பெறும். ஒரே மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரர்கள் பெற்றிருப்பின் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இக்காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தாங்கள் விரும்பும் அஞ்சல் வட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒரே விண்ணப்பத்தாரர் ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள விவரம்:
BPM- Rs. 12,000/- to 29,380/
ABPM- Rs. 10,000/- to 24,470/-
விண்ணப்பிப்பதற்கான காலகெடு முடிய இன்னும் சரியாக 4 நாட்களே உள்ள நிலையில் தகுதியான மற்றும் விருப்பமுடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறவும். இப்பதவி மத்திய அரசின் கீழ் வருமா என்கிற சந்தேகம் பலரிடத்தில் உள்ளது. அஞ்சல் துறை சாராத சேவை அமைப்பின் கீழ் தான் இக்காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
தென் மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரயில்வே வாரியம்
தங்கத்தின் விலை தொடர்ந்து 4 வது நாளாக அதிரடி குறைவு- இன்றைய விலை?
Share your comments