அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% மாக உயருகிறது.
ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அவ்வாறு எப்போதெல்லாம், அகவிலைப்படி உயர்த்தப்படுகிறதோ, அதன் அடிப்படையில், தங்கள் ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்துவதை, சில மாநில அரசுகள் கடைப்பிடிக்கின்றன.
38% ஆக
அந்த வகையில்,மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை - டிசம்பர் மாதங்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதனால் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது.
அரசு உத்தரவு
இந்த வரிசையில் தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 4% உயர்த்தி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கும், தன்னாட்சி அமைப்புகளுக்கும் டெல்லி நிதித் துறை விவரங்களை அனுப்பியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி செய்தியாக வெளியாகியுள்ளது. இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது. இதை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க...
PM-kisan 12-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த தேதியில் வருகிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!
Share your comments