மத்திய அரசைத் தொடர்ந்து, தனது அரசு ஊழியர்களுக்கும், 4 சதவீத அகவிலைப்படி உயர்வை இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அகவிலைப்படிக்கு ஏற்ப டிஏ உயர்த்தவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில்,
ராஜஸ்தான் மாநில அரசும், டெல்லி மாநில அரசும் அடுத்தடுத்து, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தங்கள் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தனர். ஏனெனில் அவர்களது அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.
தமிழகம்
அதனை அடுத்து, இந்த டி.ஏ உயர்வை, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் வராத நிலையில், வேறு ஒரு மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
ஜார்கண்ட் அரசு
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு ஏற்ப, தனது ஊழியர்களுக்கான டிஏவையும் ஜார்கண்ட் மாநில அரசு உயர்த்தியுள்ளது.
இதன்படி ஜார்க்கண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்வு கிடைக்கும். மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஜார்கண்ட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு அறிவிப்பு
ஜார்கண்ட் மாநில அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்தது. “மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போதுள்ள 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது” என்று அமைச்சரவை செயலர் வந்தனா தாடெல் கூறினார்.
இதேபோல், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை தற்போதுள்ள 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தவும் அமைச்சரவை முடிவு செய்தது என்று அவர் மேலும் கூறினார். இதன் மூலம் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 1.35 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
மேலும் படிக்க...
ராஜினாமா செய்பவர்களுக்கு 10% சம்பள உயர்வு!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!
Share your comments