மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏஐசிபி இன்டெக்ஸ், ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் உயர்த்தப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. DA உயர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எதிர்பார்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA சதவீதம் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.அரசாங்கமானது மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு மற்றும் 18 மாத நிலுவை ஊதியம் தொடர்பான அறிவிப்பை எந்த தினத்தில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிவிக்கும் என்றும் ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
4 சதவிகிதம்
இந்நிலையில், அகவிலைப்படி (டிஏ) உயர்வுக்கான முறையான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏஐசிபி இன்டெக்ஸ், ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிவிக்கின்றன.
டிஏ சதவீதம் 34 இல் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இப்போது எந்த காரணத்திற்காக 4 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது என்பது குறித்த இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக் குழுவின் கீழ் டிஏ உயர்வு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எவ்வளவு அதிகரிக்கும்?
மேலும் இந்த உயர்வின்படி, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்திற்கு ஆண்டுக்கு ரூ.8,640 உயரும் என்று எதிர்பார்க்கலாம். ரூ.18,000 அடிப்படைச் சம்பளத்திற்கு, மத்திய அரசு ஊழியர் 34 சதவீதத்தின் அடிப்படையில் தற்போது மாதத்துக்கு ரூ.6120 பெறுகிறார். புதிய எண்ணிக்கையுடன் இந்த தொகை மாதம் ரூ.6,840 ஆக இருக்கும், அதாவது மாதாந்திர டிஏ அதிகரிப்பு ரூ.720, அதாவது ஆண்டுக்கு ரூ.8,640 ஆக இருக்கும்.
2 முறை
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. டிஏ மற்றும் டிஆர் திருத்தங்கள் பெரும்பாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிகபட்ச சம்பளத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
சூரிய சக்தி பம்ப் செட் பராமரிப்பு மையம் அமைக்க ரூ.4 லட்சம் மானியம்!
Share your comments