அரசு ஊழியர்கள் எதிர்பார்த்திருந்த அகவிலைப்படி உயர்வு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 4% அகவிலைப்படியை உயர்த்துவதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், கிட்டத்தட்ட 7.5 லட்சத்தும் அதிகமான ஊழியர்கள் பலன் அடைவார்கள்.
செப்டம்பர் சம்பளத்தில்
மத்திய பிரதேச அரசு கிட்டத்தட்ட 7.5 லட்சத்தும் அதிகமான ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. அரசின் இந்த அகவிலைப்படி உயர்வானது இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடைமுறைக்கு வருமென்றும், செப்டம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு இந்த உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை முடிவு
இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து அதிகரித்து வரும் பணவீக்க விகிதங்கள் மற்றும் அத்திவாசிய பொருட்களின் விலையுயர்வு ஆகியவற்றை கருத்திற்கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படியை அமைச்சரவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதத்திற்கு பிறகு இரண்டாவது தடவையாக இப்போது டிஏ உயர்வு திருத்தம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக 3 முதல் 4 சதவீதம் வரை டிஏ உயர்த்தப்படலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரியில்
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீத டிஏ உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததுலிருந்து அரசு ஊழியர்கள் இப்போது 34 சதவீத உயர்வை பெற்று வருகின்றனர்.
2 முறை
பொதுவாக மத்திய அரசு ஜனவரி மற்றும் ஜூலை மாதம் என ஒரு ஆண்டுக்கு இரண்டு தடவை அகவிலைப்படியை உயர்த்துகிறது, ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 2019ம் ஆண்டுக்கு பிறகு கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை.
தற்போது 34 சதவீதம் அகவிலைப்படி உயர்வின் மூலம் மாதத்திற்கு ரூ.20,000 அடிப்படை சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் ரூ.6,800 பெறுகிறார்கள்.
அதேசமயம் மத்திய அரசு மேலும் 4 சதவீத டிஏ உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் ஊழியர்களுக்கு மாதம்தோறும் ரூ.800 உயர்த்தப்படும், 38 சதவீத டிஏ உயர்வில் ஊழியர்களுக்கு ரூ.7,600 கிடைக்கும். 38 சதவீதம் டிஏ உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்கள் ரூ.20,000 அடிப்படை சம்பளத்தில் ஆண்டுக்கு ரூ.91,200 பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments