1. மற்றவை

உயிருக்கு உத்தரவாதம் தரும் 5 சூப்பர் கார்கள்- விலையும் குறைவுதான்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
5 Life-Guaranteed Super Cars - Cheap!

நாம் கார் வாங்கச் செல்வதே, நம்முடையப் பயணம் சொகுசானதாகவும், அதேநேரத்தில் பாதுகாப்பு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகதான். அந்த வகையில், சிறப்பான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இந்த 5 கார்கள், பட்ஜெட் விலையில் கார் வாங்க நினைப்பவர்களுக்கு உதவும்.

மாருதி சுஸுகி பெலேனோ (maruti suzuki baleno)

நாடு முழுவதும் அதிகளவிலான மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட கார்களில் ஒன்றாக மாருதி சுஸூகி பெலேனோத் திகழ்கிறது. . ஆரம்ப விலையான 6.35 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டாப் மாடல் 9.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 360 டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் வித் இபிடி, பிரேக் அசிஸ்ட், இஎஸ்பி, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன.

ஹூண்டாய் ஐ20 (Hyundai i20)

ஹூண்டாய் ஐ20 9.48 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டாப் மாடல் 10.83 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரீமியம் ஹேட்ச்பேக்கில் EBD, Highline TPMS, ESC, ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்களுடன் ABS கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் i20 மூன்று எஞ்சின் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது.

ஹூண்டாய் வென்யூ

இந்த கார், குறிப்பாக எஸ்யூவி கஸ்டமர்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஹூண்டாய் வென்யூ டாப் மாடல் எஸ்எக்ஸ் விருப்பத்துடன் 6 ஏர்பேக்குகளை வழங்கியுள்ளது. இது தவிர, இந்த காம்பாக்ட் எஸ்யூவியானது EBD உடன் ABS, ESC அம்சங்கள் உள்ளன. ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பின்புற கேமரா, ஹைலைன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்களும் இடம்பெற்றிருக்கும். சன்ரூஃப்களும் இருக்கும்.

ஐ20 என் லைன்(hyundai i20 n line)

i20 டாப் மாடலான N8 மாடலில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஹேட்ச்பேக் கார் 1.0-லிட்டர் TGDI டர்போ-பெட்ரோல் எஞ்சின் 6-ஸ்பீடு IMT மற்றும் 7-ஸ்பீடு DCT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும். i20 உடன் ஒப்பிடும்போது, ​​N லைன் பதிப்பு சிவப்பு நிறத்தில் வருகிறது. ரெட் ஃபினிஷ் காரின் பம்பர்கள் மற்றும் சைடு ஸ்கர்ட்டுகளிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

கியா கேரன்ஸ்

கியா கேரன்ஸ் என்பது 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி. 8.99 லட்சம் ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தக் கார்கள் கிடைக்கும். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்சி, எச்ஏவி, விஎஸ்எம், டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல், பிஏஎஸ், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க...

பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?

பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!

English Summary: 5 Life-Guaranteed Super Cars - Cheap!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.