நாம் ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாக பயன்படுத்தும் கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவைகள் அனைத்தும் இந்த யூபிஐ வசதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இந்த ஆப்-களில் உள்ள யூபிஐ வசதியை பயன்படுத்தி, ஒரு நிமிடத்திற்கும் குறைவான கால அவகாசத்தில் ஒருவருக்கு பணம் அனுப்பலாம், அதேபோன்று பணமும் பெற்றுக் கொள்ளலாம்.
யுபிஐ பணப் பரிமாற்றம் (UPI Money Transfer)
பணப் பரிமாற்றம் என்பதை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு யூபிஐ எளிமையாக்கியுள்ளது என்றாலும் கூட, இதை மையமாக வைத்து சில சைபர் குற்றங்களும் அரங்கேறி வருகின்றன. யூபிஐ சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் டிவைஸ்களை எப்படியாவது ஹேக் செய்யும் மோசடியாளர்கள், அவர்களது சேமிப்பு பணத்தை திருடி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என்றால், 5 முக்கியமான பாதுகாப்பு அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
கவனத்தில் கொள்ள வேண்டியவை
உங்கள் யூபிஐ அக்கவுண்டில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 6 இலக்க அல்லது 4 இலக்க பின் நம்பரை எந்த காரணத்தை முன்னிட்டும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.
மிக முக்கியமான ஆப்-கள், ஈமெயில், யூபிஐ சேவைகள், தனித் தகவல்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கும் ஃபோனுக்கு எப்போதும் ஸ்கிரீன் லாக் செய்து வைக்க வேண்டும்.
பண பரிமாற்றம் செய்யும் ஒவ்வொரு சமயத்திலும் யூபிஐ ஐடியை ஒருமுறைக்கு, இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். தவறான பரிவர்த்தனைகளை தடுக்க இது உதவும்.
நீங்கள் எத்தனை விதமான பண பரிமாற்ற ஆப்களை பயன்படுத்தினாலும், அவை அனைத்திற்கு அடிப்படை என்பது யூபிஐ ஒன்று மட்டுமே. ஒன்றுக்கும் மேற்பட்ட யூபிஐ ஆப்-கள் பயன்படுத்துவதால் தனிச் சிறப்புமிக்க பலன் எதுவும் கிடையாது. ஆனால், இது உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி தவறான பரிவர்த்தனைக்கு வழிவகை செய்துவிடும்.
பெரும்பாலான சமயங்களில் வெரிஃபை செய்யப்படாத லிங்க்-களை பயனாளர்கள் கிளிக் செய்வதன் மூலமாகவே மோசடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே, வாட்ஸ் அப், மெசேஜ், ஈமெயில் போன்றவற்றிற்கு வரும் உறுதிப்படுத்தப்படாத லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம்.
மேலும் படிக்க
இந்தியாவின் முதல் குளோனிங் பசுங்கன்று கங்கா: தேசிய பால்வளத்துறை சாதனை!
MRP-ஐ விடவும் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Share your comments