1. மற்றவை

50,000 ரூபாய் இருந்தால் போதும்: ஈசியா இந்த தொழில் செய்யலாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Business ideas

வீட்டில் இருந்துகொண்டே நமக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்க முடிகிறது. இதுதான் இ-காமெர்ஸ். வாங்கிய பொருட்களை ரிட்டன் செய்யும் வசதி போன்ற பல்வேறு அம்சங்கள் வந்துவிட்டதால் மக்களிடையே இ-காமெர்ஸ் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

இ-காமெர்ஸ் (e-commerce)

இ-காமெர்ஸ் துறையில் தொழில் தொடங்குவதற்கு 10,000 ரூபாய் கூட போதுமானதுதான். ஆனால் செய்த முதலீட்டுக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என்ற சூழலில் குறைந்தபட்சம் 50,000 ரூபாய் தொடங்கி முதலீடு செய்யலாம். இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற ஊடகங்கள் வாயிலாக நேரடியாக விற்பனை செய்வது. மற்றொன்று அமேசான், ஃபிளிப்கார்ட், மீஸோ போன்ற வெப்சைட்கள் மூலமாக விற்பனை செய்யலாம் என்கிறார் இ-காமெர்ஸ் நிபுணரான நிவேதா முரளிதரன்.

நேரடி முறையில் எந்த செலவும் இல்லை. ஆனால் இ-காமெர்ஸ் முறையில் விற்பனை செய்யும்போது அதற்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். நீங்கள் விற்பனை செய்யும் பொருளின் விலை ஒரு ரூபாயாக இருந்தால் கூட அதற்கு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அமேசான் போன்ற வெப்சைட்களில் நீங்கள் உங்களைப் பதிவு செய்வதற்கே ஜிஎஸ்டி நம்பர் தேவை. அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

இ-காமெர்ஸ் தொழிலில் மூன்று வகையான தொழில் வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்கள் மூலமாக விற்பனை செய்வது. இரண்டு, வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் நேரடியாக விற்பனை செய்வது. மூன்று, டிராப் ஷிப்பிங் முறை. இந்த டிராப் ஷிப்பிங் முறை இந்தியாவில் இன்னும் முழுவதுமாக வரவில்லை. குஜராத், மகாராஷ்டிரா, சூரத், மும்பை உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ளன. தமிழ்நாட்டில் இன்னும் பிரபலமாகவில்லை.

டிராப் ஷிப்பிங் முறை

டிராப் ஷிப்பிங் முறை என்பது ஒரு ஏஜெண்ட் போன்றது. விற்பனை செய்பவரிடம் எந்தப் பொருளும் இருக்காது. ஆனால் ஆர்டர் மட்டும் எடுத்து பொருள் உள்ள இடத்திடம் கேட்டு அந்தப் பொருளை தேவையான இடத்துக்கு அனுப்பச் செய்யும் முறை. கிட்டத்தட்ட இடைத்தரகர் போன்றது. கொரோனா சமயத்தில் மீஸோ தளத்தில் கூட டிராப் ஷிப்பிங் முறை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க

ATM போனாலே அபராதம் தான்: பொதுமக்களே உஷார்!

பயிற்சியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு! அரசின் அருமையான திட்டம் இதோ!

English Summary: 50,000 rupees is enough: this business can be done easily! Published on: 20 January 2023, 09:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.