1. மற்றவை

அரசு மீன்வளத்துறையில் 58,000 சம்பளத்தில் வேலை- தகுதி 8-ம் வகுப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
58,000 Salary Employment in Government Fisheries - Eligibility Class VIII!

தமிழ்நாடு அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மீன்வளத்துறை (Fisheries)

சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை பொதுப்போட்டி (முன்னுரிமை பெற்றவர்) பிரிவில் சில தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி (Qualification)

  • 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு(Age limit)

  • ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியின் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 37 வரை.

  • மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட (முஸ்லீம்) வகுப்பினர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 34 வரை.

  • இதர வகுப்பினருக்கு வயது வரம்பு 18 முதல் 32 வரை.

சம்பளம் (Salary)

Level-1 - ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி (Address)

மீன்வளம் மற்றும் மீன்வள நலத்துறை இணை இயக்குநர்(மண்டலம்),
சென்னை அலுவலகம்,
DMS வளாகம் மூன்றாவது தளம்,
தேனாம்பேட்டை,
சென்னை-600006.

கடைசித் தேதி (Deadline)

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10/01/2022ம் தேதி மாலை 5 மணிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கூடுதல்  விபரங்களுக்கு 044-24328596 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்
முனைவர் ஜெ.விஜயா ராணி
சென்னை மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

சிறந்த வணிக யோசனை 2022: வருமானத்தை இரட்டிப்பாக்கும் 6 கால்நடை வளர்ப்பு தொழில்

 

English Summary: 58,000 Salary Employment in Government Fisheries - Eligibility Class VIII! Published on: 08 January 2022, 09:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.