1. மற்றவை

நல்ல பெண் தேவை என விளம்பரம் செய்த 66 வயது முதியவர்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
66 year old man to advertise as good girl wanted!
Credit : Dailythanthi

இன்பம், துன்பம் என இரண்டையும் கலந்து கொடுக்கும் வாழ்க்கையில் எதை அனுபவிப்பது என்றாலும் துணை ஒன்று தேவை.

விளம்பரப் பலகை (Billboard)

அது எந்த வயதானாலும் சரி. ஏனெனில் நமக்கென ஒரு துணை இருக்கும்போதுதான் வாழ்வே இனிமையானதாக மாறுகிறது. குறிப்பாக முதுமையில் துணை இல்லாமல் வாழ்வது வறண்ட பூமியாகத் தோன்றும்.

வகையில்கிறிஸ்துமஸை தனியாக கொண்டாட விருப்பமில்லாத முதியவர் ஒருவரின் ராட்சத விளம்பரப் பலகை அனைவரையும் கவர்ந்துள்ளது.

விவாகரத்துப் பெற்றவர் (Divorced)

அமெரிக்காவை சேர்ந்த கான்ட்ராக்டரும் உடற்பயிற்சி ஆர்வலருமான ஜிம் பேஸ். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெக்சாசுக்கு குடிபெயர்ந்த ஜிம் பேஸ், இரண்டு முறை விவாகரத்து பெற்றவர் ஆவார்.

5 பிள்ளைகளின் தந்தையான இவர் ஜூன் மாதம் தனது தொழிலை லோன் ஸ்டார் ஸ்டேட்டிற்கு மாற்றினார். இந்த சூழலில் தனிமை அவரை வாட்டியது. இதனால் தனது மீதமுள்ள நாட்களைக் கழிக்க ஒரு பெண்ணை தேடி கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸைத் தனியாக கொண்டாட விருப்பமில்லாத அவர் டெக்சாஸ் நெடுஞ்சாலையில் 'நல்ல பெண்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ராட்சத விளம்பரப் பலகையை அமைத்தார்.

வித்தியாசமான விளம்பரம்

அந்த விளம்பரப் பலகையில் 'நல்ல பெண் தேவை' என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் 50-55 வயதுடைய பெண் பேசுவதற்கு மற்றும் பரஸ்பர அன்பான செயல்களுக்கு தேவை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரப் பலகையில் அவரது தொலைபேசி எண் கீழே அச்சிடப்பட்டிருந்தது.

குரல் குறுஞ்செய்தி (Voice SMS)

பலகை வைக்கப்பட்டதிலிருந்து, ஜிம் பேஸ்-க்கு நான்கைந்து நாட்களாக பலர் குரல் வழியாக குருஞ்செய்தி அனுப்பி உள்ளனர். இதனால் அவர் குஷியாகியிருக்கிறார். சரி, சரி அவர் நினைத்தபடி, நல்லப் பெண் துணையாகக் கிடைத்தால் பரவாயில்லை. இந்த விளம்பரம் பெரும் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

ரிப்பேர் செய்ய ரூ.17 லட்சம் - ஆத்திரத்தில் Telsa காரை வெடிவைத்து எரித்த உரிமையாளர்!

250 நாய்களைக் கொன்றுக்குவித்த குரங்குகள்- பழிவாங்கிய சம்பவம்!!

English Summary: 66 year old man to advertise as good girl wanted! Published on: 22 December 2021, 08:26 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.