மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய ஊதிய விதிதத்தைப் பரிந்துரை செய்யும், 8-வது ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், கமிஷனுக்கு பதிலாக பதவி உயர்வு விதிகளை மாற்றப்பட உள்ளதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
7-வது ஊதிய குழு
7-வது ஊதிய குழுவிற்கு பிறகு தங்களுக்கு குறைவான சம்பளமே கிடைக்கப்பெறுவதாக மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதனால் மத்திய அரசு ஊழியர்கள் 8-வது ஊதிய குழுவிற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியும் 8வது ஊதியக்குழு குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
புதிய அறிவிப்புகள்
அதன்படி 8வது ஊதியக்குழுவை கொண்டு வருவதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.
அமைச்சர் விளக்கம்
இந்நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் கூறுகையில், ஊதிய மேட்ரிக்ஸில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்க வேண்டும் என்றும் இதற்கு அடுத்த ஊதியம் தேவையில்லை என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களின் தேவைக்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டிய அக்ராய்டு ஃபார்முலாக்களின் அடிப்படையில் அதை மதிப்பாய்வு செய்து திருத்தலாம், அதாவது பதவி உயர்வு விதிகளை அரசு மாற்றலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments