அமெரிக்காவில் ஒரே வீட்டில் 90க்கு மேற்பட்ட விஷப்பாம்புகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் அல் வுல்ஃப். இவர் கடந்த 32 ஆண்டுகளாக பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனங்களை மீண்டு பாதுகாப்பாக வனங்களில் விட்டு வருகிறார்.
விஷப்பாம்புகள்
இந்நிலையில் சாண்டா ரோசா பகுதியில் ஒரு வீட்டில் பாம்புகள் (Snakes) இருப்பதாக அல் வுல்ஃபிற்கு அழைப்பு வந்தது. அந்த வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தபோது, வீட்டுக்கு கீழ் பகுதியில் 90க்கு மேற்பட்ட விஷப் பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
முதலில் ஒரு பாம்பில் தொடங்கி நான்கு மணி நேரத்துக்கு தொடர்ந்து பாம்புகளை தேடி எடுத்ததாக அல் வுல்ஃப் கூறுகிறார். இதே வீட்டிற்கு அவர் அக்டோபர் 2ஆம் தேதி வந்தபோது 22 விஷப்பாம்புகளையும், 59 பாம்புக் குட்டிகளையும் கண்டெடுத்ததாக கூறுகிறார்.
அதன்பின் இரண்டுமுறை வந்தபோது 11 பாம்புகளுக்கு மேல் பிடித்துச் சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் 90க்கும் மேற்பட்ட பாம்புகளை அந்த வீட்டில் பிடித்துச் சென்றுள்ளார் அல் வுல்ஃப். இந்த பாம்புகள் காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பாக விடப்படும்.
மேலும் படிக்க
Share your comments