விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக 2023 ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை மத்திய அரசு இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தை நடத்துகிறது. மக்களிடையே தேசபக்தி உணர்வை அதிகரிப்பதும், கூட்டு பங்கேற்பை அதிகரிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.
இது தொடர்பாக தில்லியில் இன்று (12-08-2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய கலச்சாரத்துறை செயலாளர் சந்திப்பில் பேசிய மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் கலாச்சார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம், மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று கூறினார். இந்த ஆண்டு இந்த இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம் தோடர்பான பேரணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும், இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொடியுடன் தங்கள் செல்ஃபிக்களை பதிவேற்றுகிறார்களஅ என்றும் கோவிந்த் கூறினார். தேசத்துக்காக போராடிய மாவீரர்களை நினைவுகூரும் என் மண் என் தேசம் இயக்கத்திலும் திரளான மக்கள் பங்கேற்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். இந்த இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, உயர்தர தேசியக் கொடிகளை பொதுமக்களுக்கு அஞ்சல் துறை விற்பனை செய்து வருகிறது என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு 2.5 கோடி கொடிகளை வழங்குமாறு தபால் துறை கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஏற்கனவே தபால் நிலையங்களுக்கு 55 லட்சம் கொடிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோவிந்த் மோகன் கூறினார். ஜவுளி அமைச்சகம் ஏற்கனவே1.30 கோடி கொடிகளை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது என்று கலாச்சாரத் துறைச் செயலாளர் திரு கோவிந்த் மோகன் தெரிவித்தார்.
http://harghartiranga.com என்ற இணையதளத்தில் கொடியுடன் செல்ஃபி எடுத்து பதிவேற்றலாம்.
http://merimaatimeradesh.gov.in என்ற இணையத்தில் என் மண் என் தேசம் இயக்கத்தில் மக்கள் பங்கேற்று புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும் படிக்க:
"விவசாயிகள் இந்தியாவுடன் இணைய 'ஃபார்மர் தி ஜர்னலிஸ்ட்டில்' உடன் இணையுங்கள்!
தோட்டக்கலை தாவரங்களை இறக்குமதி செய்வதற்கு உரிமம் பெற எவ்வாறு பதிவு செய்வது?
Share your comments