1. மற்றவை

வெட்ட வெட்ட இரத்தம் சிந்தும் மரம்: இயற்கையின் அதிசயம்!

R. Balakrishnan
R. Balakrishnan
A tree that bleeds when cut

மனிதனை பிரமிப்பில் ஆழ்த்த இயற்கை என்றும் தவறியதே இல்லை. கதைகளிலும், கற்பனைகளிலும், திகில் திரைப்படங்களிலும் மரங்கள் இரத்தம் சிந்துவதை கண்டிருப்போம். அமானுஷ்யமான நிகழ்வாக பலரும் இதை கருதி வந்த நிலையில், உண்மையிலேயே வெட்டினால் ரத்தம் சிந்தும் மரம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

டிராகன் பிளட் மரம் (Dragon Blood Tree)

தனித்துவமான இந்த மரத்தின் பெயர் டிராகன் பிளட் (Dragon Blood Tree). சகோடா தீவில் காணப்படும் இந்த மரம், மற்ற மரங்களை போல அல்லாமல், குறைந்த அளவு நீரையே வளர எடுத்துக் கொள்கிறது. வெப்பான சூழலிலும் இந்த மரம் நன்கு வளரும். சுமார் 33 அடியிலிருந்து 39 அடி நீளம் வரை வளரும் இம்மரம் 650 வருடங்கள் வரை வாழும்.

மரத்தின் கிளைகள் அடர்த்தியாகவும், இலைகள் குடை போன்ற அமைப்போடும் இருக்கும். அனைத்தையும் விட அதிசயம், இந்த மரத்தை வெட்டினால் மரத்திலிருந்து சிவப்பு நிற பிசின் வெளிவரும். இதுவே மரத்திலிருந்து ரத்தம் வருவது போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.

இந்த மரத்தின் பிசின் மக்களுக்கு உண்டாகும் காய்ச்சலில் இருந்து அல்சர் வரை குணப்படுத்துவதாக அங்கு வாழும் மக்கள் நம்புகின்றனர். மனித கற்பனையை நிஜமாக்கிய டிராகன் பிளட் மரம், இயற்கையின் ஓர் ஆச்சர்யமே!

மேலும் படிக்க

மரம் நட விருப்பமா? இந்த விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!

தென்னை நார்க் கழிவில் உரம்: மாற்றி யோசித்தால் வருமானம்!

English Summary: A tree that bleeds when cut: Wonder of nature! Published on: 09 June 2022, 12:12 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.