இந்த மாதம் புதிதாக மஹிந்திரா கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று உள்ளது. Mahindra & Mahindra நிறுவனத்தின் சில கார்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்கள் சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகின்றன.
நவம்பர் மாதத்தில் மட்டுமே கிடைக்கும் சிறப்பு தள்ளுபடியின் கீழ் ரூ.62,000 வரை சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் மட்டுமே கிடைக்கும் இந்த சிறப்பு தள்ளுபடியின் கீழ் எந்தெந்த கார்களுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். சலுகை பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300, மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் மஹிந்திரா பொலேரோ உள்ளிட்ட கார்கள் இருந்தாலும் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ-என், தார் மற்றும் எக்ஸ்யூவி700 உள்ளிட்ட கார்கள் இல்லை.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300)
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 மாடல் காரை இந்த மாதம் வாங்குபவர்கள் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.25,000 , கேஷ் டிஸ்கவுன்ட் ரூ.23,000, ரூ.10,0000 மதிப்புள்ள அக்சஸரிஸ் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.4,000 என மொத்தமாக ரூ.62,000 தள்ளுபடியை பெறலாம். இந்த எஸ்யூவி-யின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் வேரியன்ட்களில் சலுகை உள்ளது. ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியுடன் சேர்த்து ரூ.29,000 வரை கேஷ் டிஸ்கவுன்ட் கிடைக்கும்.
மஹிந்திரா மராஸ்ஸோ (Mahindra Marazzo)
மஹிந்திரா மராஸ்ஸோ மாடலில் ரூ. 35,200 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் வரையிலான கேஷ் டிஸ்கவுன்ட், ரூ.10 ஆயிரம் வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,200 கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் அடங்கும்.
மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero)
மஹிந்திரா நிறுவனம் விரைவில் பொலிரோ நியோ பிளஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. விரைவில் அறிமுகமாக உள்ள புதிய பொலிரோ மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய இரு வெர்ஷன்களிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த கார் 7 சீட்டர் மற்றும் 9 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும். 2.2L mHawk டீசல் எஞ்சினை கொண்டு இந்த மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொலிரோவை வாங்க நினைப்பவர்கள் சிறிது காலம் காத்திருக்கலாம். ஏனென்றால் கார் வேரியன்ட்டின் அடிப்படையில் தள்ளுபடி சலுகைகள் மாறுபடும். எனினும் நீங்கள் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் பொலிரோவை வாங்க உறுதியாக திட்டமிட்டு இருக்கிறீர்களா.
மக்களிடம் பிரபலமாக இருக்கும் மஹிந்திரா பொலேரோ காரை பொறுத்தவரை ரூ. 28 ஆயிரம் வரை இந்த நவம்பரில் தள்ளுபடி பெறலாம். இதில் கேஷ் டிஸ்கவுன்ட் ரூ.6,500, ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் டிஸ்கவுன்ட், ரூ.3,000 வரையிலான கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் மற்றும் ஆக்சஸரீஸ் மீது ரூ.8,500 சலுகை உள்ளிட்டவை அடக்கம்.
மேலும் படிக்க:
Share your comments