Buy a Bike with Aadhar Card
புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையும் வரவுள்ளது. இந்த நேரத்தில் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரீட்டெய்ல் ஃபைனான்ஸ் கார்னிவல் என்ற பெயரில் சிறப்புத் திட்டத்தை ஹீரோ மோட்டோ கார்ப்(Hero) நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் பணம் எதுவும் செலுத்தாமலே வாகனம் வாங்க முடியும்.
இந்த சலுகை டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே பொருந்தும். அதற்குள் இதைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்தமான இருசக்கர வாகனத்தை வீட்டுக்கு கொண்டு செல்லலாம். பொதுவாகவே, பைக் வாங்கும்போது டவுன் பேமெண்ட்(Down payment) என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையும் வாகனக் கடன் பெறும்போது அதற்கு அதிகமான வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆனால், ஹீரோ மோட்டோ கார்ப்(Hero motor Corp) தற்போது அறிவித்துள்ள சிறப்புத் திட்டத்தில் மேற்கூறிய தொகை எதுவும் இல்லாமலே, நீங்கள் பைக் வாங்க முடியும். முன்பணம் செலுத்த வேண்டியதில்லை. கடனுக்கான வட்டியும் பூஜ்யமாகும். செயல்பாட்டுக் கட்டணமும் கிடையாது.
நீங்கள் செய்யவேண்டியது எல்லாம், உங்களுடைய ஆதார் கார்டை மட்டும் காட்டினால் போதும். ஆதார் கார்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வாகனத்தை வழங்குவார்கள். பைக்கின் மொத்த விலையை அடுத்து வரும் மாதங்களில் செலுத்தினால் போதும். புத்தாண்டு சமயத்தில் பைக் பிரியர்களைக் கவரும் நோக்கத்தில் இந்த சிறப்புத் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடையே இந்த சலுகை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க:
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களை பார்க்க வேண்டும்
Share your comments