இளைஞர்களுக்கு வேலை வாய்பை உருவாக்கும் திட்டத்தின் விதிகளில் தமிழக அரசு சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதனால், இளைஞர்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டத்தில் (UYEGP) மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மற்றும் புறச்சிந்தனை உடைய குழந்தைகளின் பெற்றோர்கள் பயன்பெற கல்வி, வயது உள்ளிட்ட விதிமுறைகளைத் தளர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
தகுதி
தமிழக அரசின் முழுமையான நிதியின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 35 வரையும் மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்சமாக 45 வரையும் வயது இருக்க வேண்டும்.
வயது
8ஆம் வகுப்பு கல்வித்தகுதியும், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மேற்கூறிய விதிமுறைகள்தான் தற்போதுவரை நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், தமிழக தொழில் வர்த்தகத் துறை ஆணையர் மற்றும் இயக்குநர் தலைமையில் மே 31ஆம் தேதி மாநில மற்றும் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் , தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு விதிகளைத் தளர்த்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
வயது தளர்வு
இதன் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற அதிகபட்ச வயதாக 45 முதல் 55 வரை என உயர்த்தியும், 8 ஆம் வகுப்பு கல்வித்தகுதி இருக்க வேண்டும் என்ற விதியை நீக்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தளர்வு செய்யப்பட்டுள்ள இவ்விதிகள், இந்த அரசாணை வெளியிடப்படும் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளர் வி.அருண்ராய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments