பொது மக்களின் வாழ்வில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, டிமாண்ட் டிராஃப்ட் பெறுதல் மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்தல் போன்ற பல செயல்பாடுகளுக்காக ஏராளமானோர் தினமும் வங்கிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. விடுமுறைக்கிணங்க பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அக்டோபர் 2023 இல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட திருவிழாக்கள், ஆண்டு விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகள் என மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். (மாநிலங்களின் முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள் ஏற்ப)
அக்டோபர் மாதத்தில் அனைத்து மாநில வாரியான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இங்கே:
- 1 அக்டோபர் 2023- ஞாயிறு- பொது விடுமுறை
- 2 அக்டோபர் 2023- மகாத்மா காந்தி ஜெயந்தி- பொது விடுமுறை
- 8 அக்டோபர் 2023- ஞாயிறு- பொது விடுமுறை
- 14 அக்டோபர் 2023- மஹாலயா- கொல்கத்தா
- 15 அக்டோபர் 2023- ஞாயிறு- பொது விடுமுறை
- 18 அக்டோபர் 2023 -கடி பிஹு- குவஹாத்தி
- 21 அக்டோபர் 2023- துர்கா பூஜை (சப்தமி)- அகர்தலா, குவஹாத்தி, இம்பால், கொல்கத்தா
- 22 அக்டோபர் 2023- ஞாயிறு- பொது விடுமுறை
- 23 அக்டோபர் 2023- துர்கா பூஜை (நவ்மி)- அகர்தலா, பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், கான்பூர், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், திருவனந்தபுரம்
- 24 அக்டோபர் 2023- துர்கா பூஜை (தசமி)- பொது விடுமுறை
- 25 அக்டோபர் 2023- துர்கா பூஜை- காங்டாக்
- 26 அக்டோபர் 2023-- துர்கா பூஜை (தாசைன்)- காங்டாக், ஜம்மு, ஸ்ரீநகர்
- 27 அக்டோபர் 2023- துர்கா பூஜை (தாசைன்)- காங்டாக்
- 28 அக்டோபர் 2023- லட்சுமி பூஜை- கொல்கத்தா
- 29 அக்டோபர் 2023- ஞாயிறு- பொது விடுமுறை
- 31 அக்டோபர் 2023- சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள்- அகமதாபாத்
இந்திய ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ செப்டம்பர் 30 கடைசி தேதியாகும் என்பதை நினைவில் கொள்க. மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகள் விடுமுறையினை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிட்டு வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், தங்களது பணப் பரிவர்த்தனைகளை மொபைல் அல்லது நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம். நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றலாம். கூடுதலாக, நீங்கள் பணத்தை மாற்ற UPI ஐப் பயன்படுத்தலாம். பணம் எடுக்க, நீங்கள் ஏ.டி.எம். போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம், வங்கி விடுமுறை நாட்களிலும் உங்கள் வங்கிச் செயல்பாடுகளைச் சீராகத் தொடரலாம்.
மேலும் காண்க:
2 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் 15.7% குறைந்தது- அதிர்ச்சி ரிப்போர்ட்
புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Share your comments