பங்குச்சந்தை மற்றும் கடன் திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு ஹைபிரிட் மியூட்சுவல் பண்ட் என்று பெயர். இந்த வகையில் உள்ள சில தீவிர ஹைபிரிட் மியூட்சுவல் பண்ட்கள் 15 ஆண்டுகள் செய்யப்பட்ட மாதாந்திர முதலீட்டை மும்மடங்காக பெருக்கியுள்ளன. அவை நிப்டி 50 குறியீடை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.
ஹைபிரிட் பண்ட் திட்டங்களில் குறைந்தபட்சம் 65 சதவீதம் பங்குகளிலும், 35 சதவீதம் கடன் திட்டங்களிலும் பணத்தை பிரித்து முதலீடு செய்வர். இதன் மூலம் பங்குச்சந்தை உயர்வின் போது சிறந்த ரிட்டர்ன் கிடைக்கும். அதே சமயம் பங்குச்சந்தை சரிவுகளின் போது கடன் திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடு இழப்பைக் கட்டுப்படுத்த உதவும். இது நீண்ட கால அளவில் பார்க்கும் போது இறுதியாக சீரான மற்றும் சிறந்த லாபத்தை வழங்கும். அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளில் ஹைபிரிட் மியூட்சுவல் பண்ட் திட்டங்களில் மாதம் 10 ஆயிரம் முதலீடு செய்திருந்தால் அதன் இன்றைய மதிப்பு என்ன என்று பார்க்கலாம்.
குவான்ட் அப்சல்யூட் பண்ட்
ஹைபிரிட் பண்ட் வகையில் அதிக லாபம் ஈட்டிய பண்டாக இந்த திட்டம் முன்னிலையில் உள்ளது. இந்த பண்ட் ஆரம்பத்தில் எஸ்கார்ட்ஸ் பேலன்ஸ்ட் பண்ட் என அறியப்பட்டது. பின்னர் குவான்ட் ஏஎம்சி நிறுவனம் இதனை வாங்கியது. 2007ல் தொடங்கி இன்று வரை மாதம் ரூ.10 ஆயிரம் இதில் முதலீடு செய்திருந்தால் 15 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் பணம் போட்டிருப்போம். அதன் இன்றைய மதிப்பு ரூ.64 லட்சமாக உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 15.4 சதவீத ரிட்டர்ன் வழங்கியுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., ஈக்விட்டி & டெட் பண்ட்
ஹைபிரிட் பண்ட்களில் இரண்டாவதாக மிக சிறப்பாக செயல்பட்ட பண்டாக ஐ.சி.ஐ.சி.ஐ.,யின் இந்த பண்ட் விளங்குகிறது. 15 ஆண்டுகளில் எஸ்.ஐ.பி., வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 15.3 சதவீதமாக உள்ளது. அதன் மூலம் ஒருவர் மாதம் 10 ஆயிரம் ரூபாய் என 18 லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு ரூ.62 லட்சமாகும்.
கனரா ரொபெக்கோ ஈக்விட்டி ஹைபிரிட் பண்ட்
இந்த ஹைபிரிட் பண்ட் ஆண்டுக்கு சராசரியாக 13.5 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. அதன்படி மாதம் ரூ.10 ஆயிரம் என 15 ஆண்டுகளுக்கு ரூ.18 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று அரை கோடி ரூபாயை தாண்டியிருக்கும். ரூ.53.6 லட்ச ரூபாய் கைவசம் இருக்கும்
எஸ்.பி.ஐ., ஈக்விட்டி ஹைபிரிட் பண்ட்
பொதுத் துறை நிறுவனமான எஸ்.பி.ஐ.,யும் சிறப்பான ரிட்டர்னை இந்த வகை பண்ட்களில் வழங்கியுள்ளது. இந்த பண்ட் ஆண்டுக்கு 13.2 சதவீத சராசரி வளர்ச்சி கண்டுள்ளது. அதன் மூலம் 15 ஆண்டுகளில் சிறுக சிறுக சேர்த்த ரூ.18 லட்சம் இன்று ரூ.52 லட்சமாக பெருகியிருக்கும்.
டாடா ஹைபிரிட் ஈக்விட்டி பண்ட்
டாடா பேலன்ஸ்ட் பண்ட் என முன்னர் அறியப்பட்ட இந்த பண்டில் 2007 முதல் இன்று வரை மாதம் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து வந்திருந்தால் அது 12.5 சதவீத ஆண்டு சராசரி வளர்ச்சி அடைந்திருக்கும். அதன்படி முதலீடு செய்த ரூ.18 லட்சம் இன்று ரூ.49 லட்சமாக உயர்ந்திருக்கும்.
டி.எஸ்.பி., ஈக்விட்டி & பாண்ட் பண்ட்
இந்த நிறுவனம் நீண்ட கால அளவில் பேலன்ஸ்ட் ரிட்டர்ன்ஸை வழங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளில் அதிக பணத்தை ஒதுக்கி நல்ல லாபத்தை முதலீட்டாளர்களுக்கு ஈட்டித்தந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 12.4 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. அதன்படி ரூ.18 லட்சத்தின் மதிப்பு இன்று ரூ.49 லட்சமாகும்.
சுந்தரம் தீவிர ஹைபிரிட் பண்ட்
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுந்தரம் மியூட்சுவல் பண்ட் ஹைபிரிட் பண்ட் வகையில் சிறப்பாக செயல்பட்ட மற்றுமொரு நிறுவனம். 15 ஆண்டுகளில் சராசரியாக 12.3% வளர்ச்சி அடைந்துள்ளது. அதன்படி ரூ.18 லட்சம் சேர்த்த பணம், இதில் ரூ.48.2 லட்சமாக வளர்ந்திருக்கும்.
பிராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஹைபிரிட் பண்ட்
இந்த பண்ட் 2007ல் இருந்து நிலையான வளர்ச்சி கண்டுள்ளது. முன்னர் பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா பேலன்ஸ்ட் பண்ட் என அழைக்கப்பட்டது. இது 15 ஆண்டுகளில் சராசரியாக 12% வளர்ந்துள்ளது. அதன் மூலம் முதலீடு செய்யப்பட்ட ரூ.18 லட்சம் இன்று ரூ.47 லட்சமாக வளர்ந்துள்ளது.
ஆதித்யா பிர்லா எஸ்.எல்., ஈக்விட்டி ஹைபிரிட் 95 பண்ட்
அதிக முதலீடுகளை நிர்வகிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஆதித்யா பிர்லா மியூட்சுவல் பண்ட். இந்த பண்ட் 15 ஆண்டுகளில் சராசரியாக 12 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. அதன்படி மாதம் ரூ.10 ஆயிரம் என ரூ.18 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு ரூ.47 லட்சமாகும்.
மேலும் படிக்க
வாடகை வீட்டிற்கும் ஜிஎஸ்டி வரி: மத்திய அரசு அறிவிப்பு!
வருமான வரி ரிட்டர்ன் இன்னும் வரவில்லையா? அப்போ உடனே இதைப் பண்ணுங்க!
Share your comments