சொந்த தொழில் தொடங்கும் தொழில்முனைவோருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) இரண்டு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இளம் தொழிலதிபர் (Young Entrepreneur)
இளம் தொழில் நிறுவனர் திவ்யா கந்தோத்ரா டாண்டன் ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திராவிடம், “மஹிந்திரா குழுமத்துக்கு உங்களின் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையால் நான் ஈர்க்கப்பட்டேன். ஒரு இளம் தொழில் நிறுவனராக எனக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு ஆனந்த் மஹிந்திரா அளித்துள்ள பதிலில், “வலி இல்லாமல் ஆதாயம் இல்லை. முதலில் நான் ஜிம்மில் சேர்ந்து வொர்க் அவுட் செய்தபோது நான் எனது comfort zone இல் இருந்து வெளியேற வேண்டும் என கோச் எனக்கு அழுத்தம் கொடுத்தார்.
ஆனந்த் மஹிந்திராவின் அறிவுரை
ஒரு தொழில் முனைவோராக மிக எளிதாகவும், மிக விரைவாகவும் கிடைக்கும் வெற்றி குறித்து நீங்கள் இயற்கையாகவே சந்தேகத்துடன் இருக்க வேண்டும். கடின உழைப்புக்கும், தவிர்க்க முடியாத மாற்றங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்.
உங்களுக்கு அதிக வெற்றி கிடைக்கும்போது ரிஸ்க் எடுப்பதற்கான ஆசை குறைந்துவிடும். எனவே, உங்களின் ஆரம்ப காலகட்டங்கள்தான் அளந்து ரிஸ்க் எடுப்பதற்கு சிறந்த நேரம். எந்தவொரு ரிஸ்க்கும் எடுக்காதவர் எதையும் சாதிப்பதில்லை. ரிஸ்க் எடுக்காத நபர் எதையும் செய்வதில்லை, அவரிடம் எதுவும் இருப்பதில்லை, அவரே ஒன்றுமில்லை, அவர் ஒன்றுமில்லாமல் போய்விடுவார் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க
அதிக பென்சன் தரும் PF திட்டம்: எப்படித் தெரியுமா?
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு: முக்கிய அறிவிப்பு!
Share your comments