ரேஷன் அட்டை தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, உங்கள் குடும்ப வருமானம். ஆண்டு ரூ.3 லட்சத்திற்கு மேல் இருந்தால், ரேஷன் அட்டை பெறத் தகுதி இல்லை. இதன் அடிப்படையில் தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டால், பலரும் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
கொரோனா தொற்று பிரச்சினையின் போது ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் உணவுகள் வழங்கப்பட்டன. ஆனால் அரசின் இலவச ரேஷனை தகுதி இல்லாத பல லட்சம் பேர் பயன்படுத்தியது அரசின் கவனத்துக்கு வந்தது. இதனால் தகுதியுடையவர்களுக்கு உதவி கிடைக்காமல் போகிறது.
கடும் நடவடிக்கை
இவ்வாறு தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வீணாக்குவதை விட அவர்களே ரேஷன் அட்டையை ரத்து செய்துவிட வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு உங்கள் ரேஷன் அட்டையை நீங்களே ரத்து செய்யாவிட்டால், சரிபார்ப்புக்குப் பிறகு உணவுத் துறை குழு அதை ரத்து செய்துவிடும். அப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படலாம்.
விதிகள்
ரேஷன் அட்டை வைத்திருப்பவர் தனது சொந்த வருமானத்தில் சம்பாதித்த 100 சதுர மீட்டர் பரப்பளவில் ஃபிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம்/டிராக்டர், ஆயுத உரிமம், குடும்ப வருமானம் கிராமத்தில் ரூ.2 லட்சத்துக்கும், நகரத்தில் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் அத்தகையவர்களுக்கு ரேஷன் பெற தகுதி இல்லை. அவர்கள் தங்களது ரேஷன் அட்டையைத் தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ரேஷன் அட்டை ரத்து
அரசு விதிகளின்படி, ரேஷன் கார்டுதாரர் தங்களது ரேஷன் அட்டையை ஒப்படைக்கவில்லை என்றால், ஆய்வுக்குப் பிறகு அத்தகையவர்களின் அட்டை ரத்து செய்யப்படும். இதனுடன், அந்த குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க முடியும். அதுமட்டுமின்றி அப்படிப்பட்டவர்கள் வாங்கிய ரேஷன் பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் படிக்க...
டீக்கடைகளில் நீங்கள் அருந்தும் தேநீர் தரமானதா? கண்டுபிடிப்பது எப்படி?
ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!
Share your comments