தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்களுக்கான பொதுத் தேர்வு - 2023 குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள நிலையில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிடங்கள் 3,359 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலினம் மற்றும் பதவி வாரியாக காலி பணியிடம் விவரம் மற்றும் விண்ணப்ப தேதி குறித்த முழு தகவல் பின்வருமாறு-
தேர்வு விவரம்:
இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு 2023-க்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணைய வழி விண்ணப்பங்களை (Online Application) தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வரவேற்கிறது. ஊதிய விகிதம் ரூ.18,200 - 67,100.
காலிப்பணியிடம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கை தேதி : 08.08.2023
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 18.08.2023 (நாளை)
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.09.2023
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி- பின்னர் அறிவிக்கப்படும்
கல்வித் தகுதி: குறைந்தப்பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2023-ன் படி குறைந்தப்பட்சம் 18 வயது- அதிகப்பட்சம் 26 வயது (வயது உச்சவரம்பானது பிரிவுகளுக்கு தகுந்தப்படி மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த காலிப்பணியிடங்கள்: 3,359
காவல்துறை : இரண்டாம் நிலைக் காவலர் ( மாவட்ட/ மாநகர ஆயுதப்படை) பதவிக்கு மொத்தம் 780 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த 780 பணியிடங்களுக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
இதைப்போல் இரண்டாம் நிலைக் காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பதவிக்கு மொத்தம் 1819 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 1819 பணியிடங்களுக்கும் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
சிறை மற்றும் சீர்திருத்தத் துறை: இரண்டாம் நிலை சிறைக் காவலர் பதவிக்கு மொத்தம் 86 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு 83 இடங்களும், பெண்களுக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்பாளர் பதவிக்கு மொத்தம் 674 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 674 பணியிடங்களுக்கும் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
ஒதுக்கீடுகள்: மொத்த காலிப்பணியிடங்களிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு 10 சதவீதம், சார்ந்துள்ள வாரிசுதாரர்களுக்கு 10 சதவீதம், முன்னாள் இராணுவத்தினருக்கு 5 சதவீதம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 3 சதவீதமும் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உள்ள அரசு விதிகளின் படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் காலிப்பணியிடம் குறித்த கூடுதல் தகவல்கள்/ விவரங்கள் மற்றும் இணையவழி விண்ணப்பித்தினை சமர்பிக்க www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தை காணவும்.
மேலும் காண்க:
Gold Rate- ஒரே நாளில் சென்னை- கோவையில் தங்கத்தின் விலை அதிரடி சரிவு
PM Vishwakarma Scheme: 18 பாரம்பரிய தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன்!
Share your comments