அசைவப் ப்ரியர் ஒருவர், ஹோட்டலுக்குச் சென்று ஒரே வேளையில் 4 கிலோ இறால் உணவை சாப்பிட்டதால், மற்ற வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அசைவப் ப்ரியர்
இதையடுத்து, அந்த சாப்பாடு ராமன் உள்ளே நுழைய ஹோட்டல் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சீனாவின் ஷாங்ஷா பகுதியைச் சேர்ந்தவர் ஹாங். அசைவ உணவுப் பிரியரான இவர் மிக அதிகமாக சாப்பிடும் சாப்பாட்டு ராமனாகத் திகழ்கிறார். ஹோட்டலுக்குச் சென்றுத் தனக்கு விருப்பமான அசைவ உணவுகளை அதிரடியாகச் சாப்பிடுவதுடன், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது இவரது வழக்கம்.
வீடியோ வெளியீடு (Video release)
விருப்பமான அசைவ உணவுகளை அதிரடியாகச் சாப்பிடுவதுடன், அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது இவரது வழக்கம்.
குறிப்பாக அங்குள்ள ஹன்டாடி பார்பிக்யூ ஓட்டலுக்கு சென்று அடிக்கடி சாப்பிடுவது வழக்கம்.
4 கிலோ இறால் உணவு (4 kg shrimp )
இவர் அந்த ஓட்டலுக்கு முதல்முறை சென்றபோது 1½ கிலோ பன்றி இறைச்சி சாப்பிட்டார். அடுத்த முறை சென்றபோது இதேபோல அதிக உணவுகளை சாப்பிட்டார். சமீபத்தில் அவர் அந்த ஓட்டலில் 4 கிலோ இறால் உணவுகளை சாப்பிட்டு தீர்த்தார். இதனால் அன்று ஹோட்டலுக்கு வந்த மற்ற வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.
அதிரடி உத்தரவு (Order of Action)
இதனால் இனி ஹாங் நுழையக்கூடாது என்று ஹோட்டல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறும்போது, அவர் எப்போது ஹோட்டலுக்கு வந்தாலும் நாங்கள் தயார் செய்து வைத்திருக்கும் உணவின் பெரும் பகுதியை சாப்பிட்டு காலி செய்து விடுகிறார். இதனால் மற்ற வாடிக்கையாளர்களுக்கு எங்களால் உணவு வழங்க முடியவில்லை. எனவே தான் அவர் ஓட்டலுக்கு வரக்கூடாது என நாங்கள் தடை விதித்திருக்கிறோம் என்று கூறினார்கள்.
பாரபட்சம்(Discrimination)
ஆனால் ஹாங் கூறும் போது, என்னை ஓட்டலில் அனுமதிக்காதது தவறு. என்னால் அதிக உணவு சாப்பிட முடிகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை. என்னை ஓட்டல் நிர்வாகம் பாரபட்சத்துடன் நடத்துகிறது என்று கூறினார்.
மேலும் படிக்க...
லட்சங்களை அள்ள சிறந்த வாய்ப்பு - உங்களிடம் 786 தொடரின் ரூபாய் நோட்டு இருந்தால்!
Share your comments