ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கியச் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. இதன்படி, மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் மூலமாக பொருள்கள் வழங்கப்படும் பொருட்களை மாற்றும் வகையில், முக்கிய விதிகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
ரேஷன் அட்டைகள்
ஏழை, எளிய மக்கள் உணவின்றிப் பசியில் தவிக்காமல், அனுதினமும் 3 வேளையும் சாப்பிட வேண்டும் என்பதுதான் ரேஷன் அட்டைத் திட்டத்தின் முக்கிய இலக்கு. அதனால்தான் ரேஷன் அட்டைகள், ஏழை எளியோரின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் அடிப்படையில், மாதந்தோறும் மலிவு விலையில் ரேஷன் கடைகளில் பல உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது.
மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் விதிகளில் புதிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. அந்த மாற்றம் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றம் 1
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் மத்திய அரசால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படுகிறது. இந்த பொருள்கள் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் இப்போது கோதுமைக்கு பதிலாக அரிசி வழங்கப்படும், அதனால் ஜூன் மாதம் முதல் குறைந்த கோதுமையும், அதிக அரிசியும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றம் 2
மத்திய அரசு கரிப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் கீழ் மே முதல் செப்டம்பர் வரை கொடுக்கப்படும் கோதுமையின் அளவை குறைத்துள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, உத்திரப்பிரதேசம் , பீகார் மற்றும் கேரளாவில் இலவச விநியோகத்திற்கு கோதுமை கிடைக்காது. அதே சமயம் டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், ம.பி., மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோதுமைக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறைந்த அளவில் கோதுமையும், அதிக அளவில் அரிசியும் வழங்கப்படும்.
கோதுமை கொள்முதல் குறைவாக இருப்பதால் தான் உத்தரபிரதேசம், பீகாரில் கோதுமை அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதுமைக்கு பதிலாக சுமார் 55 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படும் என உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!
Share your comments