பொது மக்களின் வாழ்வில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, டிமாண்ட் டிராஃப்ட் பெறுதல் மற்றும் காசோலைகளை டெபாசிட் செய்தல் போன்ற பல செயல்பாடுகளுக்காக ஏராளமானோர் தினமும் வங்கிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. விடுமுறைக்கிணங்க பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆகஸ்ட் 2023 இல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட திருவிழாக்கள், ஆண்டு விழாக்கள் மற்றும் பிற நிகழ்வுகள் என மொத்தம் 14 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். (மாநிலங்களின் முக்கிய நிகழ்வுகள், திருவிழாக்கள் ஏற்ப)
ஆகஸ்ட் 6: ஞாயிறு
ஆகஸ்ட் 8: டெண்டாங் லோ ரம் ஃபாத் (Tendong Lho Rum Faat) - (காங்டாக்கில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 12: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 13: ஞாயிறு
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் (இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும்)
ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (பார்சி புத்தாண்டை கொண்டாட பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 18: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி (ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 20: ஞாயிறு
ஆகஸ்ட் 26: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 27: ஞாயிறு
ஆகஸ்ட் 28: ஓணம் (ஓணம் கொண்டாடுவதற்காக கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 29: திருவோணம் (திருவோணத்தை கொண்டாடுவதற்காக கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 30: ரக்ஷா பந்தன் (ரக்ஷா பந்தன் காரணமாக ஜெய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 31: ரக்ஷா பந்தன்/ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி/பாங்-லாப்சோல் (ரக்ஷா பந்தன்/ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி/பாங்-லாப்சோல் காரணமாக காங்டாக், டேராடூன், கான்பூர், கொச்சி, லக்னோ மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் அந்தந்த மாநிலங்களில் உள்ள வங்கிகள் விடுமுறையினை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிட்டு வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்தகைய சூழ்நிலையில், தங்களது பணப் பரிவர்த்தனைகளை மொபைல் அல்லது நெட் பேங்கிங் மூலம் மேற்கொள்ளலாம். நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை மாற்றலாம்.
கூடுதலாக, நீங்கள் பணத்தை மாற்ற UPI ஐப் பயன்படுத்தலாம். பணம் எடுக்க, நீங்கள் ஏ.டி.எம். போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம், வங்கி விடுமுறை நாட்களிலும் உங்கள் வங்கிச் செயல்பாடுகளைச் சீராகத் தொடரலாம்.
மேலும் காண்க:
Share your comments