1. மற்றவை

தனது காரை ஹெலிகாப்டராக மாற்றிய பீஹார் இளைஞர்!

R. Balakrishnan
R. Balakrishnan
Bihar youth turns his car into a helicopter

பீஹாரில் இளைஞர் ஒருவர் தன் காரை ஹெலிகாப்டர் போல மாற்றி அமைத்துள்ளார். இதை திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட திட்டமிட்டு உள்ளார். தனது காரை முற்றிலும் வித்தியாசமான முறையில் தயார் செய்துள்ளார். பார்க்கும் அனைவரையும் ஈர்க்கிறது இவருடைய இந்த விமான வடிவிலான கார்.

விமான வடிவில் கார் (Car in the form of plane)

பீஹாரின் ககாரியா மாவட்டத்தில் வசிக்கும் திவாகர் குமார் என்பவர், தன் சிறிய ரக கார் ஒன்றை, 3.5 லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் போல மாற்றியமைத்து உள்ளார். ஹெலிகாப்டரில் இருப்பது போன்றே காரின் பின் பகுதியில் நீண்ட வால் அமைத்துள்ளார். இந்தக் காரை திருமண நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விட திவாகர் திட்டமிட்டுள்ளார்.

இவருக்கு முன், பஹாஹா என்ற இடத்தில் வசிக்கும் ஒருவர், தன் 'நானோ' காரை 2 லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் போலவே மாற்றியமைத்து உள்ளார். அவர், இந்த ஹெலிகாப்டர் காரை திருமண நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.

வித்தியாசமான இந்த முயற்சிக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்துகள் குவிகிறது. மேலும், இந்தக் காரை வாடகைக்கு விடுவதால், நல்ல வருமானமும் கிடைக்கும்.

மேலும் படிக்க

கால் டாக்சி கட்டணம் உயர்வு: ஓலா, உபர் முடிவு!

செவ்வாயில் சூரிய கிரகணம்: படம் எடுத்தது நாசா விண்கலம்!

English Summary: Bihar youth turns his car into a helicopter! Published on: 23 April 2022, 07:25 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub