பாகிஸ்தான் உயிரியல் பூங்காவில் போதிய உணவு வழங்கப்படாததால், பட்டினியால் வாடிய சிங்கம் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறது.
மோசமான நிலைமை (Worst scenario)
மனிதர்களானாலும் சரி, விலங்குகளானாலும் சரி, நிலைமை சற்றுக் கீழே இறங்கினால், நிழலும் கூட சிரிக்கும் என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப நிலைமை மோசமாக மாறிவிடும் என்பதற்கு இந்த சிங்கமே உதாரணம்.
பாகிஸ்தானின் கராச்சி நகர நகராட்சிக்குச் சொந்தமான உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கும் சரியாக உணவு விநியோகம் செய்யப்படுவதில்லை என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக அங்கு பராமரிக்கப்பட்டுவந்த காட்டு ராஜாவான சிங்கம் என்று, எலும்பும் தோலுமா மாறிப் போனது.இந்த சிங்கத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன? (What is the truth?)
இந்த பூங்காவானது கராச்சி முனிசிபல் கார்ப்பரேஷனின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் அம்ஜத் மெஹ்பூப் என்பவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல மாதங்களாக பணம் கொடுக்காமல் பூங்கா நிர்வாகம் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பட்டினியால் பரிதாபம் (Awful by starvation)
இதனால் அவர் விலங்குகளுக்கு உணவு சப்ளை செய்வதை நிறுத்தி விட்டார். இதனால் விலங்குகளுக்கு வேளா வேளைக்கு உணவு வழங்கப்படுவது இல்லை என தகவல்கள் வெளியானது.
மீண்டும் உணவு (Food again)
ஆனால் தற்போது பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும், மிருகக்காட்சிசாலைக்கு உணவு விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் மெஹ்பூப் கூறி உள்ளார்.
மேலும் நிலுவையில் உள்ள பணம் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
உணவு என்பது ஒருவரின் அடிப்படைத் தேவை. தனி ஒருவனுக்கு உணவில்லையேல், இந்த ஜகத்தையே அழிக்கலாம் என்றார் பாரதி.
மேலும் படிக்க...
நெல்லை, தூத்துக்குடி, உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட்!
PF கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்: இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
Share your comments