நாடு பிரிவினையின் போது பிரிந்து சென்ற சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு பிரிவினை (Country partition)
கடந்த 1947ல் இந்தியா சுதந்திரமடைந்த பின், இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிந்தது. அப்போது பாகிஸ்தான் சென்ற முகம்மது சித்தி, இந்தியாவில் வசிக்கும் ஹபீப், ஆகிய சகோதார்களும், பிரிந்தனர்.
சகோதரர்கள் சந்திப்பு (Brothers meet)
பிரிந்து சென்ற இரண்டு சகோதரர்களும், 74 ஆண்டுகளாக சந்திக்கவே இல்லை. இந்நிலையில் இன்று கர்தார்பூரில் உள்ள குருத்வாரா சர்தார் சாஹிப் புனித தலத்தில் சந்தித்தனர். இருவரும் கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுதனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இத்தனை ஆண்டுகளாக இருவரும் தனித்தனி நாடுகளில் வாழ்ந்து, தற்போது புனித தலத்தில் சந்தித்து இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவர்களின் சகோதர பாசம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் படிக்க
குப்பையில் கிடந்த 9 சவரன் நெக்லஸ்: மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்!
கடுமையான உறைபனியில் தேச எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள்!
Share your comments