4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் உங்களுடைய கார்டும் இடம்பெற்றிருக்கலாம் என்பதால், விபரம் தெரிந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளுங்கள்.
ரேஷன் கார்டு
இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக ரேஷன் உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.
தகுதியில்லாதவர்கள்
ரேஷன் அட்டையை நிறையப் பேர் தவறாகப் பயன்படுத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, அரிசி, கோதுமை போன்றவற்றை ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு வாங்கி, அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியுள்ள பலருக்கு ரேஷன் உதவிகள் கிடைக்காமல் போகின்றன.
மத்திய அரசு அதிரடி
எனவே,தகுதியில்லாதவர்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதைத் தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தகுதியில்லாதவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுடைய ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான உத்தரவு மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
4 கோடி கார்டுகள் ரத்து
மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி, 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் மொத்தம் 4.74 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, சுமார் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் கண்காணிப்பில் உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்கள் அலசப்பட்டு தகுதியில்லாதவராக இருந்தால் இவர்களின் ரேஷன் கார்டுகளும் ரத்து செய்யப்படலாம்.
சரண்டர் செய்வது நல்லது
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நிறையப் பேர் தங்களுடைய ரேஷன் கார்டை சரண்டர் செய்து வருகின்றனர். நிறைய வசதி படைத்தவர்களும் ரேஷன் கார்டைப் பயன்பாடுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளவர்களும் தங்களுடைய ரேஷன் கார்டை திரும்ப ஒப்படைக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் சரண்டர் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க...
Share your comments