பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் முடிவு எடுத்துவிட்டன. இதனைக் காரணம் காட்டி, ஓய்வூதியத் தொகையைக் கொடுக்க முடியாது என மத்திய அரசு நிராகரித்துவிட்டது. இதனால் பல ஆயிரம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்காக தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ள நிதியை வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழையத் திட்டம்
கடந்த 2003-ம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் எல்லா அரசு ஊழியர்களுக்கும் நடைமுறையில் இருந்தது. பின்னர் 2004 ஜனவரி 1ஆம் தேதி முதல் தேசிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள், பெரும்பாலான மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ளது.
அரசு ஊழியர்கள் கோரிக்கை
இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்பது அரசு ஊழியர்களில் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்துள்ளது. அண்மைக்காலமாக இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், சில மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பரிசீலித்து வருகின்றன.
துணிச்சலான முடிவு
2022-23ஆம் ஆண்டுக்கான ராஜஸ்தான் மாநில பட்ஜெட் உரையின்போது அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ராஜஸ்தானில் அமல்படுத்தப்பட்டது.
மத்திய அரசிடம் கோரிக்கை
இதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ள சுமார் 39,000 கோடி ரூபாய் நிதியை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராஜஸ்தான் அரசு கடிதம் எழுதியது.
மத்திய அரசு கைவிரிப்பு
இதையடுத்து, தேசிய பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை ராஜஸ்தான் அரசுக்கு வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய பென்சன் திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை மாநில அரசுக்கு திருப்பிச் செலுத்தவோ, வருவாய் வரவாக வழங்கவோ முடியாது என பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் என்ன நிலை?
அதேநேரத்தில் தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து திமுக அரசு பரிசீலித்து வருகிறது. இருப்பினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துவிட்டதால், இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் படிக்க...
நீங்கள் கோடீஸ்வரர் ஆகவேண்டுமா? போஸ்ட் ஆபீஸில் பணம் போடுங்க!
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்
Share your comments