பெங்களூரைச் சேர்ந்த ஒருவர், வறுத்த எண்ணெயில், தன் காரை 9 ஆண்டுகளாக ஓட்டி வருகிறார். இதுவரை 1.20 லட்சம் கி.மீ., வரை ஓட்டியும் காருக்கு எந்த பழுதும் ஏற்படவில்லை. கர்நாடகாவில், பெங்களூருவைச் சேர்ந்தவர் அவினாஷ் நாராயணசாமி, 40. இவர், தன் காரை 9 ஆண்டுகளாக, வறுத்த எண்ணெயில் ஓட்டி வருகிறார்.
பயோ எரிபொருள் (Bio Fuel)
காரை இயக்குவதற்காக, இவர் ஹோட்டல்களில் போண்டா, பஜ்ஜி சுடுவதற்கு பயன்படுத்தி, மீந்து போன எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்குகிறார். அதன்பின், பல்வேறு கட்டங்களில் சுத்திகரித்து, அந்த எண்ணெயை எரிபொருளாக மாற்றுகிறார்.
இதன்படி, 1 லிட்டர் எண்ணெயில் இருந்து 700 முதல் 800 மி.லி., வரை எரிபொருள் கிடைக்கிறது. இதற்கான செலவும் லிட்டருக்கு, 60 முதல் 65 ரூபாய்தான். இவர், 2013 முதல் தன் காருக்கு இந்த எண்ணெயை தான் பயன்படுத்துகிறார். இதுவரை 1.20 லட்சம் கி.மீ., வரை ஓட்டி உள்ளார். இதனால், காரின் இன்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
லிட்டருக்கு 15 முதல் 17 கி.மீ., வரை, 'மைலேஜ்' கிடைக்கிறது. இதை அனைத்து டீசல் வாகனங்களிலும் பயன்படுத்தலாம். மற்ற டீசல் வாகனங்களை விட புகையும் குறைவாக தான் உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 'பயோ' எரிபொருள் என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது.
இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் (Indian Book of Records)
இது தவிர சமையல் எண்ணெயில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் போது, வீணாகும் கழிவுகளில் இருந்து கை கழுவும், வீட்டை சுத்தம் செய்யும் கிருமி நாசினியையும் தயாரிக்கிறார். இதன் வாயிலாக இவர், 'இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க
இலவசங்கள் தொடர்ந்தால் நம் நாடும் இலங்கையாக மாறும்: நல்லசாமி எச்சரிக்கை!
Share your comments