1. மற்றவை

Central Bank of India: 1000 மேனேஜர் காலி பணியிடம்- விண்ணப்பிக்கும் முறை?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Central Bank of India announcing the recruitment of 1000 Manager posts

இந்தியாவில் 4500-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மெயின்ஸ்ட்ரீம் பிரிவில் மிடில் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல் II இல் 1000 மேலாளர் காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.

தகுதி வாய்ந்த நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ள 1000 வங்கி மேலாளர் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிபணியிடங்களின் விவரம், விண்ணப்பிக்கும் முறை, பணியிடத்திற்கான தகுதி போன்றவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான தேதி கடந்த 1.07.2023 தொடங்கிய நிலையில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.07.2023 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்: மேலாளர் அளவுகோல் II (முதன்மை) (manager scale- mainstream)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1000

வயது: 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ ST/ PWD/ Women – ரூ.175+ GST
  • மற்ற பிரிவினருக்கு- ரூ.850 +GST

தேர்ந்தெடுக்கும் முறை:

  • எழுத்துத்தேர்வு
  • நேர்முகத் தேர்வு

கல்வித் தகுதிகள்:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) முடித்திருக்க வேண்டும்.
  • CAIIB

அனுபவம்:

  • PSB/தனியார் துறை வங்கிகள் / RRB இல் அதிகாரியாக குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது)
  • PSB/தனியார் துறை வங்கி/RRB இல் எழுத்தராக குறைந்தபட்சம் 6 வருட பணி அனுபவத்துடன் MBA/MCA/முதுகலை டிப்ளமோ உடன் இடர் மேலாண்மை (diploma in Risk management) / கருவூல மேலாண்மை (treasury management) / அந்நிய செலாவணி (forex)/ வர்த்தக நிதி (trade finance) / CA/ICWA/CMA/CFA/PGDM/ டிப்ளமோ இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் & ஃபைனான்ஸ் படித்திருத்தல் அவசியம்.
  • NBFC-கள்/கூட்டுறவு வங்கிகள்/காப்பீட்டுத் துறை/ பகுதி நேரமாக நிதி நிறுவனங்களில் பணியாற்றியோர் இதற்கு தகுதி இல்லை.

எப்படி விண்ணப்பிப்பது?

  • மேலாளர் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் பின்வரும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்:
  • சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, "ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்" என்ற விருப்பத்தை தொடரவும். (அல்லது)
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை இந்த இணைப்பின் மூலம் நீங்கள் அணுகலாம் - https://ibpsonline.ibps.in/cbimmjun23/
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் அடிப்படைத் தகவல்களை நிரப்பவும். இந்த படிநிலையை முடித்த பிறகு, ஒரு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்பட்டு திரையில் காட்டப்படும். இந்த விவரங்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • கூடுதலாக, வழங்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் அடங்கிய மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
  • தேவைப்பட்டால், விண்ணப்பதாரர்கள் தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பின்னர் தங்கள் விண்ணப்பத்தை அணுகலாம் மற்றும் திருத்தலாம்.
  • அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்வதற்கும் பதிவேற்றுவதற்கும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாக நிரப்புவதும், வழங்கப்பட்ட அனைத்துத் தரவும் சரியாக இருப்பதை உறுதி செய்வதும் முக்கியம், ஏனெனில் விண்ணப்பத்தினை சமர்பித்த பிறகு அதில் மாற்றம் செய்ய இயலாது.

தேர்வானது ஆகஸ்ட் இரண்டாவது அல்லது மூன்றாவது மாதம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான தகவலை தெரிந்துக்கொள்ள கீழ்க்கணும் லிங்கை தொடரவும்.

job notification link

மேலும் காண்க:

Wipro-வில் பல்வேறு வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

English Summary: Central Bank of India announcing the recruitment of 1000 Manager posts Published on: 12 July 2023, 12:46 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.