ஜவுளித் துறையில் வேலைவாய்ப்புகளை உயர்த்தும் வகையில் சமர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஜவுளித்துறையில் பயிற்சி அளித்துப் பெண்களுக்கு வேலையும் வழங்கப்படுகிறது.
என்ன திட்டம் இது?
இந்தியாவின் உற்பத்தி மற்றும் வேலை உருவாக்கத்தில் ஜவுளி மற்றும் ஆடைகள் துறை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில், குறிப்பாக வேளாண்மையைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஜவுளித்துறைதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இத்துறையை மேலும் மேம்படுத்தவும் இத்துறையில் திறன் மேம்பாட்டை வளர்க்கவும் மத்திய அரசு சார்பாக சமர்த் (Scheme for Capacity Building in the Textiles Sector - SCBTS) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலக்கு
இத்திட்டத்தின் தலையாய நோக்கம் என்னவென்றால் ஜவுளி மற்றும் ஆடைகள் துறையில் மதிப்பு சங்கிலியைப் பலப்படுத்தவும், இத்துறையில் உள்ளோருக்கு ஆதரவு வழங்குவதும்தான். 2017 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டத்திற்காக ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜவுளித் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவதோடு, இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு வழிவகுப்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
விண்ணப்பிப்பது எப்படி?
-
சமர்த் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு https://samarth-textiles.gov.in/ என்ற வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும்.
-
உள்ளே சென்றதும் 'candidate registration' என்ற வசதியை கிளிக் செய்யவும்.
-
உடனே விண்ணப்ப படிவம் ஓப்பன் ஆகும். அதில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, ஈமெயில் ஐடி, மொபைல் நம்பர், மாநிலம், முகவரி, பயிற்சி மையம் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.
-
கடைசியாக எல்லாம் முடித்துவிட்டு 'submit' கொடுக்க வேண்டும்.
யாருக்கெல்லாம் முக்கியத்துவம்?
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு முறையாக பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கும்.
இத்திட்டத்தின் கீழ் அனைவருமே விண்ணப்பித்தாலும் SC/ST, பெண்கள், சிறுபான்மையினர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நிதி ஆயோக் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட 115 வளர்ச்சிக்கான மாவட்டங்களில் இத்திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.
மேலும் படிக்க...
புற்றுநோயைத் துவம்சம் செய்யும் 5 சூப்பர் உணவுகள்!
ஆயுளை அதிகரிக்கும் நெல்லி-சர்க்கரை நோயை அடியோடு விரட்டும் மந்திரசக்தி!
Share your comments