சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் தொடர்பான புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. இதனால், சிலருக்கு இனிமேல் சிலிண்டர் மானியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்படுத்துவோருக்கு, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.மேலும் குடும்பத்தின் ஆண்டு வரும் ரூ.10 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இருப்பினும் முன்பு எப்போதும் இல்லாத வகையில், தங்களுக்கு மானியம் வருவதில்லை எனப் பலத்தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் சிலிண்டர் மானியம் பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்க அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அரசு இரண்டு நிலைப்பாடுகளை எடுக்கலாம். ஒன்று, மானியம் இல்லாமல் சிலிண்டர்களை வழங்கலாம். இரண்டாவது, சில தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோருக்கு மட்டும் மானியத்தின் பலன் வழங்க முன்வரலாம்.
இதுவரைக் கிடைத்த தகவலின்படி ரூ.10 லட்சம் வருமானம் என்ற விதி அமலில் இருக்கும் என்றும், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மானியத்தின் பலனை தொடர்ந்து பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மக்களுக்கு மானியம் முடிவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக எல்பிஜிக்கான மானியம் சில இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்களின் போது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது வரை எல்பிஜி சிலிண்டர்களுக்கான மானியத்தை அரசு முழுமையாக நிறுத்தவில்லை.
2021 நிதியாண்டில் மானியங்களுக்கான அரசாங்கத்தின் செலவு ரூ.3,559 ஆக இருந்தது. ஜனவரி 2015 இல் தொடங்கப்பட்ட DBT திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் மானியம் அல்லாத LPG சிலிண்டரின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், மானியப் பணம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படுகிறது.இந்த ரீஃபண்ட் நேரடியாக இருப்பதால், இந்தத் திட்டத்திற்கு DBTL என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனிடையே எல்பிஜி சிலிண்டர் விலை ஆயிரத்தைத் தொட்டுள்ள நிலையில், மானியமும் நிறுத்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் உச்சக்கட்ட அதிருப்தியை வெளிப்படுத்த முன்வருவார்கள். இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்படலாம்.
மேலும் படிக்க...
ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!
Share your comments