அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் 9 லட்சம் பேருக்கு மேல் பயன்பெற்றுள்ளதாக தமிழக முதலமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில், இந்த ஒரு ஆண்டு காலத்தில் அரசு செய்த சாதனைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், அகவிலைப்படி உயர்வால் 9 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், அகவிலைப்படி உயர்வால் 7 லட்சத்து 15 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்றிருக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
31%
2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பென்சனர்கள், குடும்ப ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படி 14 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்ந்தது. 2022 ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு ரூ.8700 கோடிக்கு மேலாகச் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டது. இந்நிலையில், தற்போது திமுக அரசின் ஓராண்டு ஆட்சி காலத்தில் அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்கள் அதிகமாகப் பயன்பெற்றுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்துப் பேசிய அவர், 22 லட்சத்து 20 ஆயிரத்து 109 பேர் நகைக் கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாகவும், மகளிர் சுய உதவிக் குழுக்களால் 54 லட்சத்து 5 ஆயிரத்து 400 பேர் கடன் பெற்றதாகவும், அவ்வாறு வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ததால் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 பேர் பயன்பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
Share your comments