1. மற்றவை

38%மாக உயருகிறது அகவிலைப்படி - மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
DA hikes to 38% - Central Govt employees rejoice!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு தங்கள் செலவுத்திட்டத்தை இப்போது போடத் தொடங்கலாம்.

காத்திருப்பு
நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விரைவில் அகவிலைப்படியை மத்திய அரசு அதிகரிக்கப் போகிறது. நீங்களும் அதற்காக உயர்வுக்காகக் காத்திருந்தால், உங்கள் சம்பளத்தில் மிகப் பெரிய உயர்வு இருக்கும்.

ரூ.38%

அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் அந்தப் பணம் ஊழியர்களின் கணக்கில் வரப்போகிறது.

அறிவிப்பு எப்போது?

செப்டம்பர் மாதத்தில் இந்த அகவிலைப்படி உயர்வை அறிவிக்க மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வை செப்டம்பர் மாதத்திலேயே டெபாசிட் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்ந்து கிடைக்கும் என்று தகவல் வந்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்.

எவ்வளவு உயரும்

அதிகபட்ச சம்பளத்தை கணக்கிட்டால், அடிப்படை சம்பளமான ரூ.56,900-ல் ரூ.21622 ஒவ்வொரு மாதமும் அகவிலைப்படியாக கிடைக்கும். அதாவது இந்த ஊதிய விகிதத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,59,464 லட்சம் பலன் கிடைக்கும். அதேபோல, அடிப்படை சம்பளம் ரூ.31550 ஆக இருந்தால் ஆண்டு சம்பள உயர்வு ரூ.15144 ஆக இருக்கும். அதாவது மாத சம்பளத்தில் ரூ.1,262 உயர்வு இருக்கும்.

மேலும் படிக்க...

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.1,000 உயர்வு!

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் விதைகள்!

English Summary: DA hikes to 38% - Central Govt employees rejoice! Published on: 30 August 2022, 04:37 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.