1. மற்றவை

உங்கள் ATM கார்டில் ஆபத்து: எச்சரிக்கையாக இருங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Danger to your ATM card

நம் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். அதில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு வைத்திருப்போம். இப்போதெல்லாம் ஏடிஎம் கார்டுக்கான தேவை குறைவுதான். ஸ்மார்ட்போன் மொபைல் ஆப் மூலமாகவே ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளை முடித்துவிடுகிறோம். ஆனால் ரொக்கப் பணம் எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு அவசியம்.

ஏடிஎம் கார்டு (ATM Card)

சில நேரங்களில் ஏடிஎம் கார்டு நம்மிடமிருந்து திருடப்படலாம். அல்லாது நாமே எங்காவது தொலைத்துவிடலாம். சிலர் ஏடிஎம் மெஷினிலேயே மறந்துபோய் விட்டுவிடுவார்கள். இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏடிஎம் கார்டு தொலைந்த பிறகு உங்களது வங்கிக் கணக்கில் மோசடி நடப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்களது ஏடிஎம் கார்டை நீங்கள் பிளாக் செய்ய வேண்டும். வங்கிகளுக்குத் தெரிவிப்பதன் மூலமோ அல்லது நீங்களாகவே கூட இதைச் செய்யலாம்.

நீங்கள் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளராக இருந்தால், உங்களது எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற டோல் பிரீ எண்ணுக்கு அழைத்து நீங்கள் உங்களது தொலைந்துபோன அல்லது திருடுபோன ஏடிஎம் கார்டை பிளாக் செய்யலாம். அதேபோல, 1800 425 3800 என்ற எண்ணிலேயே புதிய ஏடிஎம் கார்டுக்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் மிக எளிதாக புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

பிளாக் செய்வது எப்படி?

  • எஸ்பிஐ ஆன்லைன் தளத்தில் சென்று உங்களது நெட்பேங்கிங் யூசர் நேம் மற்றும் பாஸ்வார்டு கொடுத்து உள்நுழைய வேண்டும்.
  • உள்நுழைந்தவுடன் ‘e-Services’ என்ற பிரிவின் கீழ் ‘ATM Card Services’ என்ற வசதியில் கிளிக் செய்து ‘Block ATM Card’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    வங்கிக் கணக்குடன் தொடர்புடைய ஏடிஎம் கார்டு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களது கணக்கில் செயல்பாட்டில் இருக்கும் அனைத்து ஆக்டிவ், இன் ஆக்டிவ் கார்டு விவரங்களும் உங்களுக்குக் காட்டும்.
  • கார்டுகளின் முதல் நான்கு எண்களும் கடைசி நான்கு எண்களும் காண்பிக்கப்படும். அதில் பிளாக் செய்ய வேண்டிய கார்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தேவையான கார்டைத் தேர்ந்தெடுத்து ‘Submit’ கொடுத்தால் உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
  • ஓடிபி எண்ணைப் பதிவிட்டு ‘Confirm’ கொடுக்க வேண்டும். இதன் பின்னர் உங்களது ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டு விடும்.

பாதுகாப்பு அவசியம்

வங்கித் துறையில் என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் ஏடிஎம் கொள்ளைகளும் பண மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நமது ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடி பணத்தை எடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ உடனே அதிலிருந்து பணம் திருடுபோவதைத் தடுப்பது அவசியமாகும்.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம்: எச்சரிக்கை விடுக்கும் நிதி ஆயோக்!

மாதம் ரூ.100 செலுத்தினால் போதும்: ரூ.3000 பென்சன் கிடைக்கும்!

English Summary: Danger to your ATM card: beware! Published on: 29 November 2022, 09:00 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.