மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்த மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு ஒரு சிறப்பு வாய்ந்த ஆண்டாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.
பொதுவாக பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகும். அதை வைத்தே இந்த முறை அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது தெரியவரும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம். இம்முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள திருத்தம் அடுத்த ஊதியக் குழுவில் பொருத்துதல் காரணி (ஃபிட்மெண்ட் காரணி) மூலம் மேற்கொள்ளப்படும். ஏழாவது ஊதியக் குழுவுக்குப் பிறகு அடுத்த ஊதியக் குழு தேவையில்லை என்று அரசு கூறுகிறது.
10 ஆண்டுகளுக்கு
அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தாமல் ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது. இதன் மூலம், கீழ்நிலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, உயர் பதவியில் அமரும் அதிகாரிகளுக்கு இணையான சம்பளம் பெறும் வாய்ப்பு கிடைக்கும். புதிய சம்பள கமிஷன் அமைக்க இன்னும் ஒரு வருடமே உள்ளது. இதற்கு முன்னதாக, ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவதற்கான புதிய ஃபார்முலாவை அரசாங்கம் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டில் ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஃபிட்மென்ட் காரணி அடிப்படையில் அடிப்படை சம்பளத்தை உயர்த்தி ஊழியர்களின் சம்பளம் மாற்றப்பட்டது. உயர் மட்ட ஊழியர்கள் மட்டுமே இதன் மூலம் பயனடைந்தனர். கீழ்மட்ட ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கொடுத்த பார்முலா மீது அரசு கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
25 லட்சம் வரை
இதேபோல், பெரிய அறிவிப்பு வீடு கட்டும் அலவன்ஸ் (HBA) பற்றிய அறிவிப்பும் வெளியாகும். தற்போது, வீடு கட்ட அல்லது பழுது பார்க்க முன்பணமாக அரசு வழங்கும் பணத்தின் வட்டி விகிதம் 7.1%. இதன்படி, ஊழியர் 25 லட்சம் வரை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இப்போது இந்தத் தொகை 30 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வட்டி விகிதம் 7.1% லிருந்து 7.5% ஆக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
4% வரை
பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படியும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments