வெளுத்து வாங்கும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், ஒரு பக்கம் பரவி வரும் டெங்கு காய்ச்சல். பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு முதல் இறை சிறு குழந்தைகளே. இதுவரை தமிழகத்தில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர், 300 க்கும் மேற்பட்டோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம்மால் மழையை தடுக்க முடியாது ஆனால் முடிந்தவரை கொசு உண்டாகாமல் தடுக்கலாம். வீடுகளின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், காலி இடங்களில் தண்ணீர் தேங்க விடாதீர்கள், தண்ணீர் தொட்டிகளை மூடி வையுங்கள் என எத்தனை ஆலோசனைகள் கூறினாலும் கொசுக்களின் தாக்கமும், பாதிப்பும் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கின்றது.
இப்படி சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்துக்கொண்டாலும் வீட்டிற்கு உள்ளேயும் சில வழிமுறைகளை பின்பற்றினால் 90 சதவீதம் கொசுக்கள் பாதிக்காமல் தடுக்கலாம்.
இயற்கை முறை
கொசுக்களை விரட்டி அடிக்க பல்வேறு ரசாயன மருந்துகள் இருந்தாலும் அதை மீறி நாம் கொசுக்களுக்கு இறையாகிறோம். அதிகரித்து வரும் பாதிப்பை சிறந்த இயற்கை முறையில் எப்படி விரட்டுவது என்று பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட், காப்பிரிக் ஆசிட், காப்பிரிலிக் ஆசிட் ஆகிய கொழுப்பு அமிலங்கள் கொண்ட கலவை கொசுக்கள், மூட்டைப் பூச்சி, ஈக்கள், உண்ணி போன்றவையை 90 சதவீதம் விரட்டி அடிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டீட் (DEET) போன்ற ரசாயன கலவைகள் 50 சதவீதம் மட்டுமே கொசுக்களை கொள்ளக்கூடியது. ஆனால் இந்த தேங்காய் எண்ணெய் கலவையானது 90 சதவீதம் கொசுக்களை கொள்ளக்கூடியது என உருது செய்யப்பட்டள்ளது.
தேங்காய் எண்ணெய் தவிர வேம்பு, மஞ்சள், புகையிலை, இஞ்சி சாற்று கலவை கொசு புழுக்களை கொள்ளக்கூடியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பூண்டு
கொசுக்களுக்கு பூண்டு வாசனை அறவே ஆகாது. பூண்டு எண்ணெய் மற்றும் தண்ணீரை 1:5 என்ற அளவில் கலந்து அதில் சுத்தமான துணியை நனைத்து சன்னல்கள், கதவுகளின் ஓரம், மூலைகள் ஆகிய இடஙக்ளில் கட்டி தொங்க விடலாம். இதனால் எளிதில் கொசுக்கள் அண்டாது.
எலும்மிச்சை மற்றும் லவங்கம்
எலும்மிச்சையை பாதியாக நறுக்கி அதில் சில லவங்கத்தை சொருகி வைத்து கொசுக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் வைத்து விட்டால் அதில் இருந்து ஏற்படும் நெடி கொசுக்களை எளிதில் அண்ட விடாது.
கொசு விரட்டி செடிகள்
கொசுக்களை விரட்டி அடிக்கும் செடி வகைகளுள் துளசி, புதினா, சாமந்தி யூகலிப்டஸ், வேப்ப இலைகள் ஆகியவை முன் வகிக்கின்றனர்.
யூகலிப்டஸ்
காய்ந்த அல்லது காய வைத்த யூகலிப்டஸ் இலையை எரிப்பதால் அதில் இருந்து வரும் புகையானது கொசுக்களை விரட்டி அடிக்கும். இதற்காக நீங்கள் தங்களது அக்கம் பக்கத்தில் யூகலிப்டஸ் இலையை பார்த்தால் கண்டிப்பாக இலைகளை சேகரித்து கொள்ளுங்கள். இலையை எரிக்கும் போது குழந்தைகளை பக்கத்தில் வைக்காதீர்கள்.
வேப்ப இலைகள் மற்றும் வேப்பங் குச்சி
சிறிது வேப்ப இலைகள் அத்துடன் வேப்பங் குச்சிகளை சேர்த்து எரித்தால் கொசு பறந்து விடும்.
இந்த இரு முறைகளையும் தாங்கள் தங்கள் வீட்டின் முன் வாசல், பின் வாசல், தண்ணீர் தொட்டிகள் வைத்திருக்கும் இடம், மாடி போன்ற இடங்களில் மேற்கொள்ளலாம். மேலும் இம்முறைகளை செயல்படுத்தும் போது கவனம் கொள்ள வேண்டும், இலைகளை எரிக்கும் போது குழந்தைகளை பக்கத்தில் விடாதீர்கள். எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு செய்ய வேண்டும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments