பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்பதற்காக கோவையைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் ஒருவர், தங்கத்தில் மஞ்சள் பையை உருவாக்கி மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
தங்கத்தில் மஞ்சள் பை (Yellow bag in gold)
நகை பட்டறையில் 100 மில்லி கிராம் தங்கத்தில் ஒரு மஞ்சள் பையும், 500 மில்லிகிராமில் ஒரு மஞ்சள் பையையும் வடிவமைத்துள்ளார்.
பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வித்தியாசமான முயற்சி (Strange attempt)
ஆனால் மஞ்சள் பையைப் பயன்படுத்துபவர்களை கிராமப்புறத்தான் என்று சித்தரிப்பதை, நகரவாசிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது அப்படியல்ல என்பதை விளக்கும் வகையிலும், மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் கோவையில் வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை செட்டி வீதி அசோக் நகரை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் மாரியப்பன். 40 வயதான இவர், மிகக்குறைந்த எடைகொண்டத் தங்கத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் நகைகளை வடிவமைப்பதில் வல்லவர்.
அசத்தல் சாதனை (Stunning achievement)
இந்நிலையில் தனது புதிய முயற்சியாக தக தகவென மின்னும் தங்கத்தில் மஞ்சள் பை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவர் தன்னுடைய நகை பட்டறையில் 100 மில்லி கிராம் தங்கத்தில் ஒரு மஞ்சள் பையும், 500 மில்லிகிராமில் ஒரு மஞ்சள் பையையும் வடிவமைத்துள்ளார்.
இதுகுறித்து நகை பட்டறை உரிமையாளர் மாரியப்பன் கூறியதாவது:-
நான் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறேன். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவது பிடிக்கும். ஏற்கனவே ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக 150 மில்லி கிராம் தங்கத்தில் ஹெல்மெட் செய்தேன்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்திய வரைபடத்தையும், கிரிக்கெட்டில் நடக்கும் வேர்ல்டு கப் உள்ளிட்ட அனைத்தை கிரிக்கெட் போட்டி கப்புகளை தங்கத்தில் வடிவமைத்துள்ளேன்.
விற்பனைக்கு (For sale)
தற்போதைய தமிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக மஞ்சள் பை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, 100 மில்லி கிராமில் மஞ்சள் பையை வடிவமைத்துள்ளேன். இதில் மீண்டும் மஞ்சள் பை பிளாஸ்டிக்குக்கு குட்பை வசனத்தை எழுதியுள்ளேன். இந்த தங்க மஞ்சள் பைகளை வாங்கிவைத்துக்கொள்ள விரும்புபவர்கள், எங்கள் கடையில் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
தொடரும் பனிப்பொழிவால் பூக்கள் விலை உயர்வு!
குளிரில் நடுங்கும் குட்டியானைகள்: போர்வை போர்த்தி பராமரிப்பு!
Share your comments