1. மற்றவை

விவசாயத்தின் வளர்ச்சியில் நாட்டின் முன்னேற்றம் அடங்கும்: தானுகா நிறுவனர் RG அகர்வால்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Development of agriculture includes country's progress: Dhanuka founder RG Aggarwal

எப்போது, ஒரு விவசாயால் "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" என்ற விழாவைக் கொண்டாட முடியுமோ, அப்போதுதான் அது உண்மையான விழாவாகும். அவ்வாறு இல்லையென்றால் 'ஆசாதி'க்கு என்ற சொல்லுக்கு ஆர்த்தமே இல்லை" என்றார், RG அகர்வால், Dhanuka Agritech Limited இன் நிறுவனர் மற்றும் தலைவர், இவர் இன்று KJ Choupal அமர்வுக்காக- 10 ஆகஸ்ட் 2022 அன்று கிரிஷி ஜாக்ரனுக்கு விஜயம் புரிந்தார்.

கிரிஷி ஜாக்ரன் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்ட் நிறுவனர் எம்.சி.டாம்னிக் அவரை வரவேற்று, “ஆர்.ஜி. அகர்வால் எனக்கு உத்வேகம் அளித்தவர் எனக் கூறினார். மேலும் எனது குழுவுடன் அவர் இங்கு தொடர்புகொள்வதை நான் பெருமையாக உணர்கிறேன் என்பதையும் தெரிவித்தார்.

கிரிஷி ஜாக்ரனின் இயக்குனர் ஷைனி டாம்னிக் அவருக்கு அன்பு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக, பசுமையான செடி ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

ஆர்.ஜி. அகர்வால் கூறுகையில், “விவசாயிகள் சரியான தகவல்களைப் பெறுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கிய கிரிஷி ஜாக்ரானில் இன்று இருப்பதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் மற்றும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். மேலும் கிரிஷி ஜாக்ரன் மூலம், நான் அவர்களின் பார்வையாளர்கள், விவசாயிகளுடன் தொடர்பு கொள்ளவும், சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முந்ததில் மிக்க மகிழ்ச்சி.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் தானுகவின் வேலைத்திட்டம் பற்றிய தனது எண்ணங்களை அவர் மேலும் பகிர்ந்து கொண்டார், மேலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்றார். கிரிஷி ஜாக்ரன் பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், விவசாயிகளுக்கு சரியான நவீன தொழில்நுட்பங்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதாகும் என்றார். விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கிடைப்பதில்லை. இந்தியாவில் விவசாயத்தின் நிலையான வளர்ச்சியை அடைய, விவசாயிகளுக்கு உலகில் கிடைக்கும் நவீன தொழில்நுட்பத்தை வழங்க வேண்டும். ஆனால், தகவல் மற்றும் தொழில்நுட்பம் இல்லாததால், விவசாயத்தில் இருந்து நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி சீனாவின் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. புதிய தொழில்நுட்பம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளுக்கு இல்லாததே நமது உற்பத்தித்திறன் குறைந்ததற்கும் பெரும் பயிர் இழப்புக்கும் காரணமாகும் என அவர் குறிப்பிட்டார்.

ஆர்.ஜி.அகர்வால் அடுத்து, டாக்டர் பி.கே. சக்ரவர்த்தி, தலைமை அறிவியல் ஆலோசகர், தானுகா தலைமை அறிவியல் ஆலோசகர் மற்றும் முன்னாள் தலைவர், FAD 3 & ADG (தாவர பாதுகாப்பு) ICAR, டெல்லி வருகை தந்தார்.

நீடித்த விவசாயத்தில் பயிர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து டாக்டர் சக்கரவர்த்தி குறிப்பாக பேசினார்.

அகர்வால், கிரிஷி ஜாக்ரன் பத்திரிக்கையாளர்கள் விவசாயிகளை அணுகி, சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தவும், பயனுள்ள ஆராய்ச்சிகளை வழங்கவும் அறிவுறுத்தினார்.

கிரிஷி ஜாக்ரன் குழுவுடன் அவர் உரையாடிய மற்றொரு முக்கியமான தலைப்பு நீர் பாசனமாகும். மானாவாரி நிலத்தை விட மழை நீர் இல்லாத நிலம் இரண்டு மடங்கு அதிகமாக விளைகிறது என்றும், தற்போது 40% நிலம் மட்டுமே பாசன வசதி பெறுகிறது என்றும், மீதமுள்ள 60% நிலம் இன்னும் பருவமழையை நம்பியுள்ளது என்றும் அவர் கூறினார். மழைநீர் சேகரிப்பு மையங்களை நிறுவி, மழைநீரை முடிந்தவரை சேமிக்க, "வயலில் உள்ள நீரையும், கிராமத்தின் நீரையும் கிராமத்தில் சேமித்து வைக்க விரைந்து தடுப்பணைகள்" அமைக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தண்ணீரை திறம்பட பயன்படுத்த உறுதுணையாக இருப்பார்கள்.

விவசாயிகளுக்கு முறையான பயிற்சி மற்றும் கல்வியுடன் நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார், இதனால் இந்த பணத்தை தனிப்பட்ட தேவைகளுக்கு செலவழிக்காமல், அவர்களின் விளைச்சலையும் வருவாயையும் அதிகரிக்கும் வகையில் அவர்களின் பண்ணைகளுக்கு உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முதலீடு செய்வார்கள் எனத் தெரிவித்தார்.

10 இலட்சம் கொடிகளை இந்தியா முழுவதும் விநியோகித்து அரசின் ஹர் கர் திரங்கா பிரச்சாரத்திற்கு தானுகா எவ்வாறு ஆதரவளித்து வருகின்றது என்பதையும் தலைவர் குறிப்பிட்டார். கிரிஷி ஜாக்ரனின் ஊழியர்களுக்கு நிறுவனம் கொடிகள் மற்றும் சுவர் கடிகாரங்களையும் விநியோகித்தது.

மேலும் படிக்க:

விவசாயிகள் இதை செய்தால்தான் பணம் கிடைக்கும்- தமிழக அரசு உத்தரவு!

இலவசங்களை அளிப்பதால் நாடு தன்னிறைவு பெறாது: பிரதமர் மோடி பேச்சு!

English Summary: Development of agriculture includes country's progress: Dhanuka founder RG Aggarwal Published on: 10 August 2022, 11:57 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.