அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களை மீண்டும் சம்பளம் உயரும் எனத் தெரிகிறது. குறிப்பாக அவர்களுக்கான 4 அலவன்ஸ்கள் உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், இது ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு பெரிய பரிசை வழங்கப் போகிறது. ஒரே நேரத்தில் 4 அலவன்ஸ்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் இருக்கும்.
38 சதவீதம்
சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் 34 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப் படி மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்ஸும் அதிகரிக்கவிருக்கிறது. இத்துடன் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் கிராச்சுட்டி தொகையும் அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வளவு உயரும்?
மத்திய அரசு ஊழியர்களின் PF மற்றும் பணிக்கொடை (கிராச்சுட்டி) கணக்கீடு என்பது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி (DA) அடிப்படையில் செய்யப்படுகிறது. எனவே அகவிலைப்படி அதிகரிப்பால் பிஎப் மற்றும் கிராசுட்டி தொகையும் அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு 3 சதவீதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர் (செப்டம்பர் 28) மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்திருந்தது. அகவிலைப்படியின் திருத்தப்பட்ட விகிதங்கள் 2022 ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் ஊழியர்களின் கணக்கில் பணம் வந்து சேரும். அரசின் இந்த முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
PM-kisan 12-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த தேதியில் வருகிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!
Share your comments