பெரும்பாலான மக்கள் தங்களின் எதிர்காலத்திற்காக சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு (Invest) செய்ய விரும்புகின்றனர். அதே நேரத்தில் அதன் மூலம் குறிப்பிட்ட வருவாயையும் பெற முடியும். ஆனால் சில நேரங்களில் தவறான இடத்தில் முதலீடு செய்வதால், அது லாபம் தருவதற்கு பதிலாக பல சிக்கல்களை உருவாக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் சரியான இடத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
வருடாந்திர வைப்பு திட்டம்
ஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் (Fixed Deposit -FD) இருந்து பொது வருங்கால வைப்பு நிதிக்கு (Public Provident Fund – PPF) என பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. எஸ்பிஐ வருடாந்திர வைப்பு திட்டம் (SBI Annuity Deposit Scheme) மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 10000 ரூபாய் வரை பெறலாம்
சிறந்த முதலீட்டு திட்டம்
எஸ்பிஐயின் (SBI) இந்த திட்டத்தில் 36, 60, 84 அல்லது 120 மாத காலத்திற்கு முதலீடு செய்யலாம். இதில், முதலீட்டின் வட்டி விகிதம் ஒரே மாதிரியாக இருக்கும். நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு டெபாசிட் செய்தால், 5 வருட நிலையான வைப்புத்தொகைக்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதத்தின் படி, உங்களுக்கு வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாதம் ரூ.10,000 வருமானம்
முதலீட்டாளர் மாதம் ரூ.10,000 வருமானம் பெற விரும்பினால், அவர் ரூ.5,07,964 டெபாசிட் (Deposit) செய்ய வேண்டும். டெபாசிட் செய்யப்பட்ட தொகையில், அவர் 7 சதவீத வட்டி விகிதத்தில் வருமானம் பெறுவார். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 கிடைக்கும். எதிர்காலத்திற்காக வருமானத்தை அதிகரிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
விதிமுறைகள்
ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்டிசம் ரூ.1000 இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். இதில் அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. வருடாந்திர கட்டணத்தில், ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வாடிக்கையாளர் டெபாசிட் செய்த தொகையில் வட்டி தொடங்குகிறது. இந்த திட்டங்கள் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்தவை, ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் சேர்ந்து இவ்வளவு பணத்தை திரட்ட முடியாது.
தொடர்ச்சியான வைப்பு (ஆர்.டி) திட்டங்கள்
பொதுவாக நடுத்தர வர்க்க மக்கள் ஆர்.டி.க்களில் (RD) முதலீடு செய்வதன் மூலம் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை சிறிய சேமிப்பு மூலம் ஆர்.டி.யில் டெபாசிட் செய்யப்படுகிறது.. மேலும் முதிர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தொகை வட்டியுடன் பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் ஆர்.டி திட்டம் மக்களால் அதிகம் விரும்பப்படும் திட்டமாக கருதப்படுகிறது..
மேலும் படிக்க
25 பைசா நாணயம் இருக்கா? நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்!
அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்! தமிழக முதல்வர் வேண்டுகோள்!
Share your comments