சிறுதுளி பெரு வெள்ளம் என்பார்கள். அவ்வாறு சிறு தொகையை முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு தபால் அலுவலக சேமிக்க நிச்சயம் கைகொடுக்கும். தபால் அலுவலக முதலீடு மூலம் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்க முடிகிறது.
தபால் அலுவலக முதலீடு என்றாலே சிறு சேமிப்பு திட்டங்கள், சிறிய முதலீடு, பாதுகாப்பான லாபம் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இது உண்மைதான் என்றாலும், தபால் அலுவலக திட்டத்திலேயே முதலீடு செய்து கோடீஸ்வரராக முடியும் என்றால் நம்ப முடியுமா?
தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF) ஒரு முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தில் பாதுகாப்பான முதலீடு, நல்ல லாபம், வருமான வரி சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. மேலும், இதில் முதலீடு செய்து கோடீஸ்வரராகவும் முடியும்.
7.1% வட்டி
தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்கு 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி வருமானத்தை வைத்து ஓரு நபர் ஒரு கோடி ரூபாய் ரிட்டயர்மெண்ட் நிதியை ரெடி பண்ணலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மெச்சூரிட்டி காலம் 15 ஆண்டுகள். அதன்பின் தேவைக்கு ஏற்ப 5 ஆண்டுகளாக நீட்டித்துக்கொள்ளலாம். உதாரணமாக 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என்ற வகையில் நீட்டித்துக்கொள்ளலாம்.
எனவே, ரிட்டயர்மெண்ட் போன்ற நீண்டகால இலக்குகளுக்கு பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்தலாம்.உதாரணமாக, 25 வயது முதல் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீட்டை தொடங்குவதாக வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 12,500 ரூபாய் முதலீடு செய்து வந்தால், அதாவது ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துவந்தால் 15 ஆண்டுகளில் 40.68 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். ரிட்டயர்மெண்டுக்கு முன் 25 ஆண்டுகள் இத்திட்டத்தில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.
ரூ.65.58 லட்சம் வட்டி
மொத்தமாக மெச்சூரிட்டியின்போது உங்களுக்கு 1,03,08,012 ரூபாய் கிடைக்கும். 25 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த மொத்த தொகை 37.50 லட்சம் ரூபாய். உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானம் 65.58 லட்சம் ரூபாய். மொத்தமாக மெச்சூரிட்டியில் 1.03 கோடி ரூபாய் கிடைக்கும்.
மேலும் படிக்க...
அடுத்த வாரம் அசானி புயல்- வங்கக்கடலில் உருவாகிறது!
ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!
Share your comments