1. மற்றவை

தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 மாநிலங்களவை இடங்களுக்கு விரைவில் தேர்தல்.

T. Vigneshwaran
T. Vigneshwaran

தமிழகத்தில் காலியாக இருக்கும் 3 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை ஓரிரு நாட்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தகவல் வெளிவந்த நிலையில், தமிழகத்தை பொறுத்த வரை மூன்று இடங்கள் காலியாக இருக்கின்றது. அதிமுக கட்சியை சார்ந்த முஹம்மது ஜான், வைத்திலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தனர்.

அவர்களில் முஹம்மது ஜான் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி  இருவரும் நடந்துமுடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால், மாநிலங்களவை பதவியை அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை இடங்கள் காலியாக இருப்பதால், விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு தமிழக தேர்தல் ஆணைத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் கருத்து கேட்டு இருந்தது.

திமுக மற்றும் காங்கிரஸ்:

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து காலியாக இருக்கும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

3 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்தினால், இந்தமுறை மூன்று இடங்களும் திமுகவிற்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் திமுக சார்பில் ஒரு இடம் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படும்,மேலும்  இந்த மூன்று இடங்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் யார் நிறுத்தப்படுவார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

மேலும் படிக்க:

பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

Breaking News:தமிழகத்தில் கொரோனா தொற்றால் 3,715,54 பேர் பலி.

சுயவேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்: ஸ்டாலின் அறிவுறுத்தல்!

 

English Summary: Elections to the 3 vacant seats in Tamil Nadu will be held soon. Published on: 06 July 2021, 05:03 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.